சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட அவசியப்பாடுகள்:-
கிடையாது.
சேவைகள் பற்றிய விபரங்கள்
புகையிரத தலைமையகத்தின் வணிக அத்தியட்கசர் அலுவலகத்தில் இந்த விசேட புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ளலாம். (தொலைபேசி இலக்கம் 011-2320109)
சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம்
இவ்விபரப் புத்தகத்தில் 3வது அத்தியாயத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவம் 2.2 (அ) பூர்த்தி செய்து வணிக அத்தியட்சகர் அலுவலகம் புகையிரத தலைமையகத்தில் ஒப்படைப்பதன் மூலமாக விசேட புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ள முடியூம். அவ்வாறின்றேல் நிறுவனத்தின் பெயர் பயணிகள் எண்ணிக்கை ஆரம்ப மற்றும் இறுதிப் புகையிரத நிலையங்கள் மற்றும் பயணஞ் செய்ய உத்தேசித்துள்ள திகதிகளைக் குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்புவதன் மூலமாகவூம் ஒதுக்கிக்கொள்ள முடியூம்.
விண்ணப்பப் பத்திரத்திற்கான கொடுப்பனவூ:-
கொடுப்பனவூ கிடையாது.
ஒதுக்கிக்கொள்ளக்கூடிய நேரங்கள்:-
கிழமை நாட்களில் காலை 09.00 மணியில் இருந்து மாலை 04.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:-
கிலோ மீற்றருக்கான கட்டணம்
முதலாம் வகுப்பு ரூ.700.00
இரண்டாம் வகுப்பு ரூ.600.00
மூன்றாம் வகுப்பு ரூ.500.00
சேவையை வழங்க எடுக்கும் காலம்
விண்ணப்பப் பத்திரம் கிடைத்த பின்னர் புகையிரதத் தொகுதிகளை ஒதுக்கக்கூடிய இயலுமை பற்றி பரிசீலனை செய்து அது பற்றி அறிவிப்பதோடு கட்டணத்தை அண்மையில் உள்ள புகையிரத நிலையத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படும். இக்கொடுப்பனவூகளை 02 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்.
சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
வேறு விபரங்கள் தேவையில்லை. பயணம் பற்றிய விபரங்கள் போதுமானது.
சேவையை வழங்குதல் தொடர்பில் பொறுப்பு வகிக்கும் உத்தியோகத்தர்கள்:
பதவி |
பெயர் |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
வணிக அத்தியட்சகர்s |
திரு. விஜய சமரசிங்க |
+94-11-2320109 |
+94-11-2320109 |
com@railway.gov.lk |
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை புகையிரதத் திணைக்களம்
புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு. திரு. எல்.பி.எச். வடுகே தொலைபேசி:+94 11 2 421281 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|