தகுதி
• வியாபார ஸ்தாபனம் பதிவுச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
• கீழேக் கூறப்பட்டுள்ள குழுமத்திடமிருந்து பெற்ற விசைவு.
| இறக்குமதியின் வகை |
சம்பந்தப்பட்ட குழுமம் |
| மேற்கத்திய நாடுகளின் மருந்துகள் |
அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் குழுமம் (சுகாதார அமைச்சகம்) வழங்கப்பட்டப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும். |
| ஹோமியோபதி மருந்துகள் |
இலங்கை ஹோமியோபதி அமைப்பினால் வழங்கப்பட்டப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும். |
| கால்நடை மருந்துகள் |
பெரடீனியாவிலுள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் வழங்கப்பட்டப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும். |
| ஆயுர்வேத மருந்துகள் |
ஆயுர்வேதத் திணைக்களத்தால் வழங்கப்பட்டப் பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும். |
| அறுவைச் சிகிச்சைகளின் போது பயன்படும் இணைப்புக் கருவிகள் |
அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் குழுமத்தால் (சுகாதார அமைச்சகம்), (கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்) வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தை விண்ணப்பதாரர் வைத்திருக்க வேண்டும். |
குறிப்பு:
விண்ணப்பதாரர் உரிம நிபந்தனைகளுக்கு கீழ்ப்படியாதப் பட்சத்தில், அவருடையப் பகுதி கப்பல் சரக்கு உரிமம் அபராதத்துடன் வழங்கப்படும்
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பப்படிவம் பெறுதல்
கருமபீடம் – பகுதி 01
பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்-----கருமபீடம் – பகுதி 01
விண்ணப்பப்படிவங்கள்
சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவின் மாதிரிப் படிவம்
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• இடாப்பின் 4 பிரதிகள்
• பூர்த்திச் செய்யப்பட்ட சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவத்தின் 4 பிரதிகள்
• வியாபார பதிவுச் சான்றிதழின் உண்மை பிரதி மற்றும் நிழற்படப் பிரதிகள்
• பதிவுச் சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்தின் உண்மைப் பிரதி மற்றும் நிழற்படப் பிரதிகள்.
படிப்படியான வழிமுறைகள்:
படி 1:
பகுதி 01ல் (மருந்து) உள்ள தலைமை எழுத்தரிடமிருந்து விண்ணப்பதாரர் சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவத்தைப் பெற வேண்டும்.
படி 2:
விண்ணப்பதாரர் பூர்த்திச் செய்யப்பட்டச் சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவத்தின் 4 பிரதிகள், இடாப்பின் 4 பிரதிகளையும் இணைப்பு ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 3:
பகுதி 01ல் சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களைச் சரிப்பார்க்கவும்.
படி 4:
ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்காக உரிம வேண்டுகோள் அனுப்பப்படும்.
படி 5:
துணைக் கட்டுப்பாட்டாளர் உரிம வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் விண்ணப்பதாரர் சரக்குப் பட்டியலின் மதிப்பில் 0.1% உரிமக் கட்டணமாகச் செலுத்துதல்
படி 6:
பகுதி 01 கணிப்பொறி மூலம் உரிமத்தைத் தயாரித்தல் மற்றும் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்தல்.
படி 7:
துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுக்கோளுக்கு ஒப்புதல் அளித்தல்
படி 8
உரிமத்தின் 3 பிரதிகள் ஏற்றுமதியாளர் மற்றும் வங்கிக்கும் ஒரு பிரதி திணைக்களத்தினரால் வைத்துக் கொள்ளப்படும்
குறிப்பு:
சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் சரியானதாக இல்லாதப் பட்சத்தில் வேண்டுகோள் நிராகரிக்கப்படும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஒரு நாளுக்குள்ளாக.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவம் பெறுதல்
கருமப்பீடம் – பகுதி 01
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வரை
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
பணம் செலுத்துதல்
கருமப்பீடம் – காசாளர்
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 3.30 வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
கருமப்பீடம் – பகுதி 01
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலக்கோடு
இந்தப் பொருட்களுக்கான ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலம் 6 மாதங்கள் ஆகும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்:
விண்ணப்பப்படிவம் பெறுவதற்கு எந்த செலவினமும் இல்லை.
கட்டணம்:
உரிமக்கட்டணம் – இடாப்பு மதிப்பில் 0.1%
அபராதங்கள்:
விண்ணப்பத்தாரர் உரிமம் இல்லாமல் சரக்குகளை இறக்குமதி செய்திருந்தால், இறக்குமதி மதிப்பிலிருந்து அபராதமாக செலுத்த வேண்டிய சதவிகிதத்தை துணைக் கட்டுப்பாட்டாளர் முடிவெடுப்பார்.
இதரக் கட்டணம்:
இதரக் கட்டணமில்லை
சிறப்பு வகையறைகள்
உரிமம் இல்லாமல் இறக்குமதிச் செய்யும் பட்ச்சத்தில், பொருட்களைப் பெறும் உரிமம் அபராதத்துடன் வழங்கப்படும் பொருட்கள் பெறுவதற்கான உரிமத்தைப் பெறக் கீழ்க்காணும் ஆவணங்கள் தேவைப்படுகிறது.
• சுங்கவரி ஆவணங்கள்
• விளக்கக் கடிதம்
• சம்பந்தப்பட்டக் குழுமத்திடமிருந்துப் பெறப்பட்ட ஒப்புதல் கடிதம்
• பற்றுச்சீட்டு
அமைப்பு பற்றிய தகவல்இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
1வது தளம்,
ஹேமாஸ் கட்டிடம்,
இலக்கம் 75-1/3,
யோர்க் தெரு,
கொழும்பு 1.
திரு.W.A.R.H. வன்ஸதிலக தொலைபேசி:+94-11-2326774 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2328486 மின்னஞ்சல்: imexport@sltnet.lk இணையத்தளம்: www.imexport.gov.lk
|