தகுதி
• வியாபார பதிவுச் சான்றிதழ்
• சம்பந்தப்பட்டக் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வாணிகப் பதிவுச் சான்றிதழ்
• சரக்குப் பட்டியலின் 4 பிரதிகள்
• சம்பந்தப்பட்டக் குழுமத்திடமிருந்து பெறப்பட்ட அங்கீகாரக் கடிதம் வேண்டும்.
| இறக்குமதியின் வகை |
ஒப்பந்த மாதிரி |
ஆய்விற்கான மாதிரி |
மேம்படுத்தலுக்கான மாதிரி |
மேற்கத்திய மருந்து
|
மாநில மருந்தியில் கூட்டுறவு (S.P.C) |
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம் |
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம் |
| கால்நடை மருந்து |
- |
கால்நடை உற்பத்தி மற்றும் நலத் திணைக்களம் |
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம் |
ஹோமியோபதி மருந்து
|
- |
ஹோமியோபதி குழுமம் |
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம் |
| ஆயுர்வேத மருந்து |
- |
ஆயுர்வேத திணைக்களம் |
Cஅழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம் |
அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் இணைப்புக் கருவிகள்
|
- |
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக்குழுமம்(நல அமைச்சகம்) (கால்நடை உற்பத்தி மற்றும் நலத் திணைக்களம்)
|
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக்குழுமம்(நல அமைச்சகம்) (கால்நடை உற்பத்தி மற்றும் நலத் திணைக்களம்)
|
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்களைப் பெறுதல்
கருமபீடம் – பிரிவு 01
கட்டணத்தை செலுத்தல்
கருமபீடம் - காசாளர்
விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம், மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்.
விண்ணப்பப்படிவங்கள்
1969தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் சட்ட இலக்கம் 1)
தடையற்ற வாணிப இறக்குமதிக்கான உரிமத்தின் விண்ணப்பம்
படிப்படியான வழிமுறைகள்:
படி 1:
விண்ணப்பதாரர் பிரிவு 01ல் உள்ள (மருந்து பகுதி) தலைமை எழுத்துவிளைஞரிடமிருந்து தடையின்றி இறக்குமதி வாணிகம் செய்வதற்கான மாதிரி விண்ணப்பத்தை பெற வேண்டும்.
படி 2:
விண்ணப்பதாரர் பூர்த்திச் செய்யப்பட்ட அலுவலக உத்தரவுப்படிவத்தின் 4 பிரதிகள், சரக்கு பட்டியலின் 4 பிரதிகளையும் இணைப்பு ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 3:
பகுதி 01ல் அலுவலக உத்தரவுப்படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை சரிப்பார்க்கவும்.
படி 4:
ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரின் அங்கீகாரத்திற்காக உரிம வேண்டுகோள் அனுப்பப்படும்.
படி 5: ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் மாதிரி உரிம வேண்டுகோளை அங்கீகரித்தல்
படி 6:
விண்ணப்பதாரர் சரக்கு பட்டியலின் மதிப்பில் 0.1% உரிம கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
படி 7:
பகுதி 01ல் கணிப்பொறி மூலம் உரிமத்தைத் தயாரித்தல் மற்றும் கட்டுப்பாட்டாளரின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்தல்.
படி 8
துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுக்கோளை அங்கீகரித்தல் மற்றும் கையெழுத்திடுதல்.
படி 9
உரிமத்தின் 3 பிரதிகளில், ஒன்று இறக்குமதியாளருக்கும், ஒன்று வங்கிக்கும் வழங்கப்படும் மற்றும் ஒன்று திணைக்களத்தினரால் வைத்துக் கொள்ளப்படும்
குறிப்பு 01:
• சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் சரியானதாக இல்லாதப் பட்சத்தில், விண்ணப்பதாரர் சரியான மற்றும் தெரிவிக்கப்படாத தகவல்களைப் பிரிவு 01க்கு வழங்க வேண்டும்.
• துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுக்கோளை அங்கீகரிக்காவிட்டால் விண்ணப்பதாரர் சரியானத் தகவல்களை வழங்க வேண்டும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஒரு நாளுக்குள்ளாக.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்களைப் பெறுதல்
கருமப்பீடம் – பிரிவு 01
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வனர
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
பணம் செலுத்துதல்
கருமப்பீடம் – காசாளர்
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 3.00வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வனர
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
விண்ணப்பப்படிவம், மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
கருமப்பீடம் – பிரிவு 01
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வனர
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலக்கோடு
மாதிரி உரிமத்தின் ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலம் 6 மாதங்கள் ஆகும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்:
விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கு எந்த செலவினமும் இல்லை.
கட்டணம்:
உரிமக்கட்டணம் – சரக்கு பட்டியல் மதிப்பின் 0.1%
அபராதங்கள்:
உரிம நிபந்தனைகளின் படி குற்றவாளியாகக் கருதப்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஒவ்வொரு வகைக்கேற்றப்படி அபராதங்கள் மாறுப்படும்.
இதரக் கட்டணம்:
இதரக் கட்டணமில்லை
சிறப்பு வகையறைகள்
விண்ணப்பதாரர் உரிமமில்லாமல் மாதிரிகளை இறக்குமதி செய்திருந்தால், துணைக் கட்டுப்பாட்டாளர் கூடுதல் கட்டணத்தை விதிப்பார் மற்றும் சாமான்கள் பெறும் உரிமத்தை வழங்குவார். சாமான்கள் பெறும் உரிமத்தைப் பெறக் கீழ்க்காணும் ஆவணங்கள் தேவைப்படும்.
• சுங்கவரி ஆவணங்கள்
• விளக்கக் கடிதம்
• சம்பந்தப்பட்டக் அதிகாரச்சபையிடமிருந்துப் பெறப்பட்ட அங்கீகாரக் கடிதம்
| சேவை |
சம்பந்தப்பட்டக் அதிகாரச்சபை |
| மேற்கத்திய நாடுகளின் மருந்து |
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம் |
| கால்நடை மருந்து |
பேராதனை கால்நடை தயாரிப்புகள் மற்றும் நலத் திணைக்களம் |
| ஹேமியோபதி மருந்து |
இலங்கையின் ஹோமியோபதிச் சபை(council) |
| ஆயுர்வேத மருந்து |
ஆயுர்வேதத் திணைக்களம் |
| அறுவைச் சிகிச்சையின் போது பயன்படும் இணைப்பு கருவிகள் |
அழகுச் சாதனங்கள் மற்றும் மருந்துக் அதிகாரச்சபை (நல அமைச்சகம்) அல்லது கால்நடைத் தயாரிப்புகள் மற்றும் நலத் திணைக்களம் |
அமைப்பு பற்றிய தகவல்இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
1வது தளம்,
ஹேமாஸ் கட்டிடம்,
இலக்கம் 75-1/3,
யோர்க் தெரு,
கொழும்பு 1.
திரு.W.A.R.H. வன்ஸதிலக தொலைபேசி:+94-11-2326774 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2328486 மின்னஞ்சல்: imexport@sltnet.lk இணையத்தளம்: www.imexport.gov.lk
|