கலை துறையில் ஈடுபட்டுள்ள, மேலும் ஈடுபட்டு வரும் அனைத்து கலைஞர்களுக்கும் இவ் உத்தேசத்திட்டத்தில் பதிவாகலாம்.
பிரதேச கலாசார உத்தியோகத்தர் மற்றும் கலாசார அபிவிருத்தி துணை உத்தியோகத்தர்களினது சிபாரிசும் பிரதேச செயலாளரின் சிபாரிசும் கொண்ட விண்ணப்பப் பத்திரத்தை கலாசார அலுவல்கள் பணிப்பாளரிடம் முன்வைக்க வேண்டும்
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தொடர்புடைய பிரதேச செயலகம் ஆகியவற்றினால் விண்ணப்பப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம்
. விண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்
. விண்ணப்பப் பத்திரிக்கைகளை அலுவலக நேரத்தினுள் ஆண்டு பூராவும் கையளிக்க முடியும்
இச் சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்படமாட்டாது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் / திருமண அத்தாட்சிப் பத்திரம் / அடையாள அட்டை ஆகியவற்றின் முதற்பிரதியுடன் நிலற்பிரதி இனைத்து அனுப்பப்படுதல் அவசியம்
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / பணிப்பொறுப்பினைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராக துணை பணிப்பாளர் செயற்படுவர்
இலங்கை சமூக பாதுகாப்பு சபையுடன் இணைந்து இவ் ஓய்வூதிய சம்பள உத்தேசதிட்டத்தினை செயற்படுத்துவதோடு கலாசார அலுவல்கள் திணைக்களம் கலைஞர்களுக்கான கட்டனம் செலுத்தலை நிரைவேற்றி வருகிறது. இதற்கேற்ப கலைஞ்ஞரின் மாதாந்த கட்டன செலுத்தும் சுமை நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டு காலமாக மாதாந்த கட்டனங்கள் செலுத்தலின் பின்பு அல்லது கலைஞரின் வயது 60 ஆண்டுகளை கடந்துப்போவதின் பின்னர் இலங்கை காப்புறுதி சபை கலைஞர்களுக்காக ஓய்வூதிய சம்பள திரட்டுகளை மாதம் தோரும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறாக ஒரு கலைஞருக்கான ஆக குறைந்த அளவில் ரூபா 3000 மும் ஆக கூடிய அளவிலான ஓய்வூதிய சம்பளமாக ரூபா 8000 வரையும் வழங்கப்படும்.