கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் |
|
|||
கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப அனுமதி நடைமுறை 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். டிஜிட்டல் பகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமாப்பிக்கப்படலாம். அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும்.
முக்கிய விடயங்கள்
டிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்?
மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 011 532 9200 / 001 532 9175 இலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா?
நீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலகமாகவோ இலங்கைப் பிரசையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுச்சீட்டொன்றினை அவசரமாகப் பெற்றுக்கொள்ளல் உங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். (கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலின் கீழ் பார்க்கவும். கடவுச்சீட்டொன்றின் செல்லுபடியாகும் காலவரையறை தற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம். கடமை நேரங்கள் யாவை?
கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிப்பது எப்படி? பத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவிடம் (01 ஆம் மாடி – சாதாரண சேவை/ 02 ஆம் மாடி – அவசர சேவை) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். இங்கு இடத்தைக் கண்டறிவதற்கு உரிய பொத்தானை அழுத்தவும்.
கடவுச்சீட்டு வகைகள் யாவை?
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:07:18 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |