Required Forms IC/C/SPA C/P/I/O/2003/01 | |||||||||
விசேட ஏற்பாடுகள் |
|
||||||||
விசேட ஏற்பாடுகள் இந்திய வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குதல்
1988 இன் 39 ஆம் இலக்கமுடைய சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கமுடைய சட்டங்களின் கீழ் அவர்களின் கோரிக்கையின் பேரில் பிரசாவுரிமையை உறுதிப்படுத்துவதன் மூலமாக இந்திய வம்சாவளியினருக்கு சான்றிதழ்களை விநியோகித்தல். இந்த வகைப்படுத்தலின் கீழ் இலங்கைப் பிரசாவுரிமையைக் கோருவதற்கான தகைமைகள் உள்ளனவா? குடியுரிமைச் சட்டம் விதிக்கப்பட்ட திகதிக்கு முன்பதாக (1948.11.15) நீங்கள் இலங்கையில் வசித்துவந்த இந்திய வம்சாவளியாயின் அல்லது அத்தகைய ஒருவரின் வழித்தோன்றல் ஆயின் இந்த வகைப்படுத்தலின் கீழ் நீங்கள் இலங்கைப் பிரசாவுரிமையைக் கோரலாம். எவ்வாறு விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வது?
விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுத்தல்கள்
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு ஒப்படைத்தல் வேண்டும்?
குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையக இந்திய - இலங்கை பிரசாவுரிமைப் பிரிவு, "சுகுறுபாய", பத்தரமுல்லை. விண்ணப்பப் பத்திரத்துடன் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
"சுகுறுபாய", பத்தரமுல்லை இல் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் இந்திய - இலங்கைப் பிரசாவுரிமைப் பிரிவுக்கு கிழமை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை. பிரசாவுரிமைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் தேவைப்படும்?
சீன வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குதல்
சீன வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குவதற்கான 2008 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்கமுடைய சட்டம் 2008.10.31 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரத்தக்கதாக இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் அமுலில் இருந்த பிரசாவுரிமைச் சட்டங்கள் மூலமாக இலங்கைப் பிரசாவுரிமையைப் பெறாத 1948.11.15 ஆம் திகதியில் இருந்து இலங்கையில் வசிக்கின்ற சீன வம்சாவளியினருக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் இதன் கீழ் இலங்கைப் பிரசாவுரிமைக்காக விண்ணப்பிக்க உரிமையுண்டு. குறிப்பு: இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட திகதியில் இருந்து ஐந்து வருடகாலம் வலுவில் இருக்கும். எனவே தகைமை கொண்ட அத்தனை பேரும் இத்தருணத்திலேயே இலங்கைப் பிரசாவுரிமைக்காக விண்ணப்பிக்குமாறு தயவுடன் அறிவிக்கப்படுகிறார்கள்.
எவரால் விண்ணப்பிக்க முடியும்?
சீன வம்சாவளியினரான எவருக்கும்.
விண்ணப்பிப்பது எவ்வாறு?
விண்ணப்பிக்கும் வேளையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனியாக விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் வேளையில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் பெற்றோரில் ஒருவரது விண்ணப்பப் பத்திரம் மூலமாக விண்ணப்பித்தல் வேண்டும். குடும்பமொன்றின் அங்கத்தவர்கள் அனைவரும் ஒரே தடவையில் விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்பப் பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்வது எப்படி?
குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் இந்திய - இலங்கைப் பிரசாவுரிமைப் பிரிவு, "சுகுறுபாய", பத்தரமுல்லை. பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை? தயவு செய்து கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் மூலப் பிரதிகளை அவற்றின் நிழற் பிரதிகளுடன் சமர்ப்பிக்கவும். (மூலப் பிரதிகள் மீண்டும் ஒப்படைக்கப்படும்.)
மேற்படி ஆவணங்கள் இல்லாவிடின் உங்களின் இலங்கை வதிவினை உறுதிப்படுத்துவதற்காக கல்விச் சான்றிதழ்கள், சாரதி அனுமதிப் பத்திரம் போன்ற பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:09:37 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |