அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல் |
|
|||
3.3.2.1 அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல் அடையாள அட்டையை திருத்துவதற்கான காரணங்கள் • முதன்முதல் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆளின் தற்போதைய உருவமும் வித்தியாசப்படல். • பெயர் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்படல். • வசிப்பிடம் மாறியதால் ஏற்பட்ட விலாச மாற்றம். • தொழில் மாற்றத்தினால் அல்லது தற்பொழுது செய்யும் தொழில் வேறுபடுவதால் தொழிலின் பெயரைச் சேர்த்தல். • முதல் அடையாள அட்டையில் குறிப்பிட்ட விடயங்கள் தெளிவற்றிருத்தல். • பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை பழுதாகியமை அல்லது சிதைந்து போயிருத்தல். • 1972 - 1974 காலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இப்பொழுது செல்லுபடியாகாதாகையால் புதிய அடையாள அட்டைகள் வழங்குதல். அட்டையை திருத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் • ஆட்பதிவுத்திணைக்கள வீ (8) ம் இலக்க விண்ணப்பப்படிவம் (இளஞ்சிவப்பு நிறம்/சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட படிவம்) • பழைய அடையாள அட்டை. • 4 வர்ணப் புகைப்படங்கள் (13/8 X 7/8 அங்|) • தொழில் குறிப்பிடப்படவேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3 மாதங்களுக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகளைப் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். உதா - மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்றோர் தொழில்சார் தகைமைகள் தொடர்பாக பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும். • 15 ரூபா பெறுமதியான முத்திரை. • அடையாள அட்டை இலக்கம் பாவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் (அடையாள அட்டையில் இலக்கம் தெளிவில்லாமல் இருப்பின்) • அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட பெயர், பிறந்ததிகதி பற்றிய விபரங்கள் மாறுபட்டு அல்லது தெளிவில்லாமல் இருந்தால் பிறப்புச் சான்றிதழ், உத்தேச வயதுச் சான்றிதழ்களின் மூலப்பிரதியுடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி அல்லது வெற்றுவிடை ஆவணத்துடன் மாற்று ஆவணங்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும். • விவாகமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருக்கு முன் சேர்க்க வேண்டியிருந்தால் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும். • பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய சமநேர பிக்கு சான்றிதழ் அல்லது உபசம்பத தேரர் சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி. • திரும்பவும் சாதாரண மனித வாழ்க்கைக்கு திரும்பிய பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய பிக்கு அல்லாததுக்கான சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி. • கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால், இவர்கள் சமய குருமார்கள், என்பதை உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட கடிதங்கள்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-05 12:41:42 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |