படி 1: நல்வாழ்வு பிரிவு உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை செய்தித்தாளில் விளம்பரப்படுத்துதல்.
படி 2: செய்த விண்ணப்பம் மற்றும் இணைப்பு ஆவணங்ளை SLFEBயின் நல்வாழ்வு பிரிவில் சமர்ப்பித்தல்.
படி 3: நல்வாழ்வு பிரிவின் SLFEBஆல் தகுதியான விண்ணப்பதாரரின் இணைப்பு ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்.
படி 4: அனைத்து விண்ணப்பங்களும் அது தொடர்பான இணைப்பு ஆவணங்களுடன் நல்வாழ்வுப் பிரிவில் பதிவு செய்யப்படுகிறது.
படி 5: தேர்ந்த விண்ணப்பதாரர் மக்களுக்குரிய வங்கியில் சிசு உதான கணக்கீட்டை திறக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்.
படி 6: வங்கியில் கணக்கு தொடங்கிய பின் நல்வாழ்வு துறையானது விண்ணப்பதாரரின் கணக்கில் தொகையை பற்று வைக்கும்.
குறிப்பு:
தேவையான இணைப்பு ஆவணங்ளை சமர்ப்பிக்க தவறினால் மற்றும் விண்ணப்படிவங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யாவிடில் நல்வாழ்வு பிரிவானது விண்ணப்பபடிவத்தை நிராகரித்துவிடும்.
உதவித்தொகையின் வகை |
தொகை |
5வது நிலைக்கான உதவித்தொகை பரீட்சை |
ரூ.15,000/= |
க.பொ.சாத.பரீட்சை (G.C.E O/L) |
ரூ.20,000/= |
உயர்க்கல்வி |
ரூ.30,000/= |
தகுதி:
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இடம்பெயர்ந்த பணியாளர் பதிவு செய்திருக்க வேண்டும்.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டுமாயின் இடம்பெயர்ந்த பணியாளர்களின் ஒப்பந்த காலம் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி இருக்க வேண்டும்.
உதவித்தொகையின் வகை |
கால நேரம் |
5வது நிலைக்கான உதவித்தொகை பரீச்ட்சை |
வருடத்தில் ஆகஸ்ட் முதல் நாள் நடக்கும் தேர்வுக்குள் மற்றும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் |
க.பொ.சாத.பரீச்ட்சை (G C E O/L) |
பரீட்ச்சை நடக்கும் திகதிக்குள் மற்றும் மூன்று வருடங்களுக்கு முன்னால் |
உயர்க்கல்வி |
பதிவு செய்யும் திகதிக்குள் மற்றும் மூன்று வருடங்களுக்கு முன்னால் |
உயர்க்கல்வி:
விண்ணப்பதாரர் இரண்டு வருடம்/அதற்கு மேற்பட்ட காலம் உள்ள கல்வித்திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும்.இக்கல்வித் திட்டம் ஒரு பல்கலைக்கழகம்,தொழிற்கல்லூரி அல்லது ஏதெனும் ஒரு அரசு உயர்க்கல்வி பயிலகத்தின் முலம் அளிக்கப்பட்ழருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் கல்வி முகாமின் முதலாம் ஆண்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
தகுதித் தேவைகள் சரிவர இல்லை எனில் வேண்டுகோளானது நிராகரிக்கப்படும்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
படி 1: விண்ணப்பப் படிவத்தை பெறுதல்.இடம்பெயர்ந்த பணியாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் படிவம் உள்ளூர் நாளிதழில் பிரசுரிக்கப்படும்.
படி 2: விண்ணப்பப் படிவத்தை சமர்பித்தல்.விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தவுடன் இணைப்பு ஆவணங்ளையும் சேர்த்து இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நல்வாழ்வு பிரிவிடம் சமர்ப்பிக்கவும்.
குறிப்பு:
இணைப்பு ஆவணங்ளை சரிப்பார்க்கவும்.
விண்ணப்பப்படிவங்கள்:
சகானா ஆயுள்காப்பீடு கோரும்படிவம் (SLBFE F3)
காலக்கெடு :
செயல்முறைக் காலக்கெடு:
இந்த செயல்முறை 6 மாதகாலத்தில் முடிவடையும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு:
படி 1: விண்ணப்ப படிவத்தை பெறுதல்.செய்தித்தாளில் வெளியாகும் விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்.
படி 2: விண்ணப்ப படிவத்தை சமர்பித்தல்.பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான இணைப்பு ஆவணங்ளை அஞ்சல் மூலமாக செய்தித்தாளில் குறிப்பிடப்பட்ட கடைசி திகதிக்கு முன்பாக பிரிவிற்கு அனுப்ப வேண்டும்.
தேர்ந்த விண்ணப்பதாரர் தேவையான இணைப்பு ஆவணங்ளை அனுப்பியத் தகுதியான விண்ணப்பதாரர்.
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கெடு:
செய்தித்தாள் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள கடைசி திகதிக்கு முன்பு வரை.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
செலவினம்:
ஆவணங்ளை அஞ்சல் மூலமாக அனுப்புவதற்கான அஞ்சல் கட்டணம்.
கட்டணம்:
வழங்கப்பட்ட சேவைக்கு கட்டணம் இல்லை.
அபராதங்கள்:
நபர் யாரெனும்
(அ) இச்சட்டத்தின் கீழ் இணைக்கப்பட வேண்டிய விளக்க உரை அல்லது அறிக்கையை அளிக்க தவறினாலோ தன் அறிவுக்கு உட்பட்ட எழுதப்பட்ட விளக்க உரையில் எழுதப்பட்ட பதில் அறிக்கையை இணைக்க தவறினாலோ
(ஆ) இச்சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணையில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் தன் அறிவுக்கு உட்பட்டு தவறானதாகவோ அல்லது சரியானதாக அல்லாது இருப்பின்
(இ) பிரிவு 44 ன் கீழ் அமைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அடி பணிய தவறினாலோ
இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு மற்றும் வழக்கு விசாரணைக்கு பிறகு குற்றம் நடுவரால் நிருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ரு:1000.00 க்கு குறையாமல் ரு: 1,500.00 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 12 மாதங்களுக்கு குறையாமலும் 2 வருடங்களுக்கு மிகாமலும் சிறை தண்டனை அளிக்கப்படும்.
கட்டணங்கள் மற்றும் மாற்றங்கள்:
கட்டணம்:
இலங்கைக்கு வெளியே பணி புரியும் ஒவ்வொரு நபரும் ரு:2000.00 செலுத்தவும்.
இலங்கை அரசை விட்டு வெளியேறும் போதும் கட்டணம் செலுத்தவும்.
இதர கட்டணம்:
இச்சேவைக்கு செலவினம் ஏதுமில்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
வெளிநாட்டு தொழிலாளியின் பதிவு செய்த பற்றுச்சீட்டு பிரதி
வெளிநாட்டு தொழிலாளியின் கடவுச்சீட்டு பிரதி
தேசிய அடையாள அட்டை/அஞ்சல் அடையாள அட்டை
பிறப்புச் சான்றிதழின் பிரதி
தேர்வு முடிவுத்தாளின் பிரதி
வெளிநாட்டு தொழிலாளி அல்லது விண்ணப்பதாரரின் பெயரில் ஏதெனும் மாற்றம் ஏற்பட்டால் அதற்குரிய பிரதியை இணைத்தல்
மேல் நிலை கல்வி நிறுவனம் தந்த அடையாள அட்டையின் பிரதி
குறிப்பு:
அனைத்து ஆவணங்களும் பள்ளி முதல்வரால் உறுதி அளிக்க பெற்றிருக்க வேண்டும்.
சேவைகளின் பொறுப்பு குழு:
நபரின் பதவி |
பிரிவின் பெயர் |
முகவரி
(தளம் அவசியமில்லை) |
உதவி அலுவலர் |
நல்வாழ்வு பிரிவு |
SLFEB தரைதளம் |
உயர் அலுவலர் |
நல்வாழ்வு பிரிவு |
SLFEB தரைதளம் |
சிறப்பு குழு |
நல்வாழ்வு பிரிவு |
SLFEB தரைதளம் |
பள்ளி முதல்வர் |
பள்ளி |
|
சிறப்பு வகையறைகள்:
சிறப்பு வகையறைகள் அறிக்கை இல்லை.
போலித் தரவுகளுடன் கூடிய மாதிரிப்படிவம்:
போலித் தரவுகளுடன் கூடிய மாதிரிப்படிவம் கிடைக்கப்பெறவில்லை.
அமைப்பு பற்றிய தகவல்Sri Lanka Bureau of Foreign Employment
No.234,
Denzil Kobbekaduwa Mawatha,koswatta,
Battaramulla.
தொலைபேசி:1989 / (+94)11 2 880 500 தொலைநகல் இலக்கங்கள்: மின்னஞ்சல்:info_center@slbfe.lk இணையத்தளம்: www.slbfe.lk
|