The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home ஆட்களின் பதிவுகள் மரணம் இறப்பை பதிவு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     Form 63 A     Form 15
இறப்பை பதிவு செய்தல்

PDF Print Email

இறப்பை பதிவு செய்தல்

தகுதி
-    இலங்கை நபர் யாரேனும் கோட்ட செயலக எல்லைக்குள் இறந்திருப்பின் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடமிருந்து இறப்பிற்கான சான்றிதழை பெற தகுதியானவராகிறார்.
குறிப்பு:
-    இறப்பானது வசிக்கும் இடத்தில் அல்லாது வேறு இடத்தில் நிகழ்ந்தால் அந்த இருப்பிடத்தில் இருக்கும் பதிவாளரை சந்தித்து ஒரு பயனும் இல்லை
-    இறப்பு நிகழ்ந்த நேரத்தின் போது இறந்தவருடைய உறவினர் அல்லது இறுதியாக இருந்த நபர் விபரங்களை கொடுக்க வேண்டும்.
-    தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரியக் குற்றம்.

சமர்ப்பிக்கும் வழிமுறைகள்
1    விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்

-    விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திலுள்ள பதிவாளரிடம் இருந்து அல்லது விசாரணைப் பிரிவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
-    விண்ணப்பதாரர் தயாரித்த மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம்.    விண்ணப்பப்படிவம் இலக்கம்
-      DP/AL வருடம்/மாதம்
சாதாரன பதிவு- படிவம் 63 A
தாமதமானப் பதிவு – படிவம் 15

2    இணைப்பு ஆவணங்கள்
இறப்பு நிகழந்ததை நிரூபிப்பதற்கான இணைப்பு ஆவணங்கள் பின்வருமாறு:
இறப்பானது 3 மாதங்கள் கடந்த பிறகு பதிவு செய்யப்பட்டிருப்பின்; அதற்கான ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.
•    வசிக்கும் இடத்தில் இறப்பு நிகழ்ந்திருந்தால் கிராம சேவகரின் அறிக்கை.
•    இறப்பானது மருத்துவமனையில் நிகழ்ந்திருந்தால் மருத்துவ அலுவலரின் இறப்பு அறிக்கை.

இறப்பானது 3 மாதங்கள் கடந்த பிறகு பதிவு செய்யப்பட்டிருப்பின்; அதற்கான ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.
•    வேண்டுகோள் கடிதம்.
•    இறப்பிற்கான அறிவிப்பு
•    2 கண்ணால் பார்த்த சாட்சிகள் வாக்குமூலமாக அளிக்கும் சாட்சி.
•    புத்தமதகுரு பான்சுகுலாவில் பங்கு கொண்டிருந்தால் அல்லது அடக்கம் செய்யும் பொழுது பங்கேற்ற மத குருமார்கள்.
•    ஈமச்சடங்கிற்கான அமைப்புகள் இருந்தால் அவ்வமைப்பிற்கான வாய்மொழி ஆதாரம்.
•    திடிரென இறப்பு நிகழ்ந்திருப்பின், திடிரென இறப்பு நடந்ததை விசாரிப்பவருடைய விசாரணை அறிக்கை.
   

3    தேவையான விண்ணப்பத்தை ஒப்படைத்தல்
-    விண்ணப்பதாரர் பதிவாளரிடம் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் அல்லது அஞ்சல்தலை உறையுடன் கூடிய பதிவாளரின் முகவரிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அனுப்புதல்.
  குறிப்பு:
-    விண்ணப்பதாரர் பதிவு தபாலில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
-    இறப்பு நடந்ததும் விண்ணப்பதாரர் உடனடியாக கிராம சேவகருக்கு தகவல் அளிக்க வேண்டும். அதன் பின் 5 நாட்களுக்குள் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
இறப்பிற்கான சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு அதற்கான காலத்திற்குள் அஞ்சலில் அனுப்பப்படும்.    

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம்:
மு.ப. 9.00. – பி.ப. 12.30
பி.ப. 1.00 – பி.ப. 4.45

விண்ணப்பப்படிவம் இலக்கம் / பெயர்

விபரம்

இறப்பு சான்றிதழ் மற்றும் / அல்லது பதிவுகளுடைய ஆய்விற்கான  - படிவம் B 63 யு

இறப்பை பதிவு செய்வதற்கு

படிவம் 15-இறப்பு தொடர்பான தாமதப் பதிவிற்கான குறிப்புகளை வெளியிடுதல்

3 மாதத்திற்குப் பிறகு பதிவு செய்தது காலாவதியாகி விடும்.


படிப்படியான வழிமுறைகள் (இறப்பின் பதிவு)

படி 1: விண்ணப்பதாரர் விசாரனை குழு அல்லது கோட்ட செயலகத்தின் பதிவாளரிடமிருந்து விண்ணப்ப படிவம் பெறுதல் வேண்டும்.
படி 2: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை தயாரித்தல் மற்றும் பூர்த்தி செய்தல்.
படி 3: விண்ணப்பதாரர் இணைப்பு ஆவணங்களை தயாரித்தல்.
படி 4: விண்ணப்பதாரர் அஞ்சல் மூலம் கோட்ட செயலகத்திடம் அனுப்புதல் அல்லது கோட்ட செயலகத்தின் பதிவாளரிடம் நேரடியாக ஒப்படைத்தல்.
 

குறிப்பு:
 விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம்/நேரடியாக முத்திரையிடப்பட்;ட உரையுடன் ஒப்படைக்க வேண்டும்.

படி 5: கோட்ட செயலகம் விண்ணப்பத்தை வாங்குதல் மற்றும் செயல்படுத்துதல் மற்றும் கிராம நில சேவகர் அல்லது மருத்துவமனை அறிக்கையோடு இணைப்பு ஆவணங்கள் சரிபார்த்தல்.
படி 6: விண்ணப்பதாரர் பிறப்பு சான்றிதழை அஞ்சல் மூலமோ அல்லது நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு :
    விண்ணப்பதாரர் தகுதியற்றவர் எனில், பதிவாளர் விண்ணப்பம் தகுதியிழந்த காரணத்தை கூறி விண்ணப்பதாரருக்கு அஞ்சல் மூலம் திருப்பி அனுப்பிவைப்பார்.

காலக் கோடு
செயல்முறை காலக்கோடு

கிராம நில சேவகர் அல்லது மருத்துவமனையிடமிருந்து உறுதியான விபரங்கள் கிடைக்கப் பெற்றால், இறப்பு சான்றிதழ்கள் விண்ணப்பதாரருக்கு 2 டிலிருந்து 3 நாட்களுக்குள்ளாக தயாரித்து அனுப்பபடும்.
குறிப்பு :
எடுத்துக்காட்டாக தேவையான இணைப்பு ஆவணங்கள் கிடைக்கப்பெறாமல் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பம் தயாரிப்பதற்கு கால தாமதமாகும். இந்த மாதிரி நேரங்களில் ஒரு மாத காலம் கூட ஆகும்.

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

படி 1: விண்ணப்ப படிவம் பெறுதல்
விண்ணப்ப படிவத்தை விசாரனை குழுவிடமிருந்து அல்லது கோட்ட செயலகத்தின் பதிவாளரிடமிருந்து, வேலை நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
வேலை நாட்கள் – திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை விரும்பப்படுகிறது).
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00மணி முதல் பி.ப 12.30 மணி வரை, பி.ப 1.00 மணி முதல் 3.00மணி வரை.
              விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.

படி 2: விண்ணப்ப படிவத்தை சமர்பித்தல்
விண்ணப்பங்கள் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டால், நேரங்கள் செலவாகாது. விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பினால் விண்ணப்பம் சம்மந்தப்பட்ட அதிகாரமுள்ளவரை அடைவதற்கு அஞ்சலகம் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
வேலை நாட்கள் – திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை விரும்பப்படுகிறது).
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00மணி முதல் பி.ப 12.30 மணி வரை, பி.ப 1.00 மணி முதல் 3.00மணி வரை.
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது.

சேவைத் தொடர்பான செலவீனங்கள்
சாதாரன வகையில் கிடைக்கப்பெறாது. ஆயினும், கீழ்கானும் எடுத்துக் காட்டுகளுக்கு முத்திரை கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
•    இறப்பு நடந்து 3 மாதங்கள் முதல் 1 வருடம் கழிந்து விட்ட நிலையில், இறப்பை பதிவு செய்தல்.
•    முத்திரை கட்டணமாக ரூபா 20/- பெறப்படும்.
•    இறப்பு நடந்து ஒரு வடத்திற்கு பிறகு, இறப்பை பதிவு செய்தல்.
•    முத்திரை கட்டணமாக ரூபா 20/- பெறப்படும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்

இறப்பு கீழே சொல்லப்பட்டது போல் நடந்திருக்கு என்பதை நிருபிப்பதற்கான இணைப்பு ஆவணங்கள்:
   

இறப்பு நடந்து 3 மாதங்கள் கழிந்த பிறகு பதிவு செய்தால், பின் வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
•    வீட்டில் இறப்பு நடந்திருந்தால், கிராம நில சேவகரின் அறிக்கை.
•    மருத்துவமனையில் இறப்பு நடந்திருந்தால், மருத்துவ அலுவலரின் இறப்பு அறிக்கை.

இறப்பு நடந்து 3 மாதங்கள் கழிந்த பிறகு பதிவு செய்தால், பின் வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
•    வேண்டுகோள் கடிதம்
•    இறப்பு அறிக்கை
•    கண்ணால் கண்ட 2 சாட்சிகளின் வாக்குமூல ஆதாரம்.
•    பனசுகுலாவில் பங்கு பெற்ற புத்த துறவி அல்லது புதைக்கும் பொழுது பங்கு பெற்ற மதகுரு.
•    ஈமச்சடங்கிற்கான உதவிகள் சமூகம் இருப்பின், அந்த சமூகத்தின் அலுவலக ஊழியர்களின் வாய்மொழி ஆதாரம்.
•    திடிர்என்று இறப்பு நேர்ந்தால், திடிர் இறப்பினை விசாரித்ததற்கான விசாரனை அறிக்கை.



முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:43:55
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 289
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty