The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு Leisure அரச குறு நாடக விழா
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     application form 1     application form 2
அரச குறு நாடக விழா

PDF Print Email

சிங்கள நாடக கலையின் முன்னேற்றத்திற்கு காரணமாகின்ற குணாதிசய மற்றும் ஆக்கபூர்வ சுபாவம் போன்றே ஆய்வூதிய மற்றும் மாற்று விதிமுறைகள் உபயோகிப்பதற்கு சந்தர்பங்கள் ஏற்படுத்துவதைக் கொண்டு நாடக துறையில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கின்ற மற்றும் அவர்களினது பலதரப்பட்ட திறன்களை தேசிய அளவில் மதிப்பிட்டு பாராட்டும் நோக்கத்துடன் வருடம் தோறும் சிங்கள குறு நாடக விழா ஒழுங்கு படுத்தப்படுகின்றது.

    அரச குறு நாடக விழா தொடர்பான தகவல்கள் வருடம் தோறும் பத்திரிகை மறறும் ஏனைய ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப் படுகின்றன.
    இலங்கையில் எந்தவொரு பிரஜைக்கும் இதற்கான விண்ணப்பங்கள் முன்வைக்கலாம்.
    விண்ணப்பதாரி கண்டிப்பாக நாடகத்தின் இயக்குனராக இருக்க வேண்டும்.

முன்வைக்கப்படுகின்ற குறு நாடகம்,
    குறைந்தபச்சம் 20 நிமிடங்களாகவும் கூடியபச்சம் 30  நிமிடங்களாகவும் இருத்தல் வேண்டும்.
    பொது மக்களுக்கு பொருத்தமான தனி, சுய நாடகமாக இருத்தல் வேண்டும்.
    இது தொடர்பாக இருக்கின்ற அமைப்புவிதிகளில் கூறப்பட்டுள்ள தெளிவுபடுத்தல்களுக்கு பொருந்தியதாக இருத்தல் அவசியம்.
    A-4 அளவிலான தாளில் தனிப் பக்கத்தில் பதித்து (தட்டெழுத்து/கணனி மூலம் – நாடகத்தின் கதை பொழிப்பு மற்றும் கதா பாத்திரங்கள் அறிமுகப்படுத்துவதற்காக பக்கங்களை உட்படுத்தி) தெளிவான மூன்று பிரதிகளாக முன்வைக்க வேண்டும்.
    குறு நாடக விழா அமைப்புவிதிகளில் காணப்படும் மாதிரி படிவ விண்ணப்பம் இதற்காக பயன்படுத்த வேண்டும்.

கவனத்தில் கொள்ளுக ; மேலதிக விபரங்கள் வருடந்தோறும் அரச குறு நாடக விழாவிற்காக படைப்புகள் கோரப்படுவதற்காக வெளியிடும் அமைப்புவிதிகளில் காணப்படும். அனைத்து விசாரணைகளுக்காக 0112-872385 என்ற தொலைபேசி ஊடாக தேசிய நாடக துணைக்குழுவின் செயலாளரை தொடர்புகொள்ளுக.
       
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு மூன்று நாடக பிரதிகளை இணைத்து, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினமோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் படி,
   
    செயலாளர்,
    தேசிய நாடக துணைக் குழு,
    கலாசார அலுவல்கள் தினைக்களம்,
    8ஆம் மாடி – செத்சிரிபாய,
    பத்தரமுல்லை.

    என்ற முகவரிக்கு கொண்டு வந்து கையளித்தலோ பதிவு தபால் மூலம்  அனுப்புவதோ மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பங்கள், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, பத்தரமுல்லை என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்.

பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்படுகின்ற படைப்புகள் முன்வைக்கப்பட வேண்டிய இறுதி திகதிற்கு முன்னர் அலுவலக நேரத்தினுள் படைப்புகளை கையளிக்கலாம்
சேவையீட்டுவதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.
    மேடையேற்றுவதற்காக தணிக்கை சபையின் அனுமதியை பெற்ற அனுமதிப்பத்திரத்தின் பிரதி
    குறு நாடக இயக்குனர் நாடக பிரதி எழுத்தாளராக இல்லாத பச்சத்தில் அதனை தயாரிப்பதற்காக எழுத்தாளர் தனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள கடிதம்
    அமைப்புவிதிகளில் வரும் மேலதிக இணைப்பில் காணப்படுகின்ற பத்திரத்தின் பிரகாரம் அந்தந்த பாத்திர வகை நடிக்கப்படுகின்ற நடிக-நடிகை தொடர்பான பெயரட்டவணை
    நாடக இயக்குனரின் புகைப்படமொன்றும் சிறு குறிப்பும்
    நாடகத்தின் பொழிப்புரை-கதை அல்லது பொருள் பற்றிய சிறு குறிப்பீடு
    பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு தகுந்த விதத்திலான நாடகத்தின் பல காட்சிகள்

கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை கணிப்பாளர், கலாசார துணைப் பணிப்பாளர்( செயலாளர், தேசிய நாடக துணைக் குழு) பணிப்பொறுப்பினைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராக துணைப் பணிப்பாளர் செயற்படுவார்.
       
விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பத்திர பிரதியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.









































அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை


திரு. ஐ.சி.ஜே. குணரத்ன
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:26:53
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 313
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty