- பிறப்பு பதிவு செய்தல் குறிப்பு
- 01 வது கூட்டின் விபரம் ( பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்)
- 03 வது கூட்டின் விபரம் ( பால்)
- 05 வது கூட்டின் விபரம் (தாயின் விபரங்கள் அனைத்தும்)(பிறப்பினை பதிவுசெய்ததன் பின் தாயின் பெயர் மாற்றப்பட்டிருந்தால்,பெயர் மாற்றம் இந்த ஒதுக்கீட்டின் கீழ்செய்ய முடியாது)
- 09 வது கூட்டின் விபரம் (தகவல் அளிப்பவரது விபரங்கள்) திருத்தப்பட முடியும்.
- பிரதிக்கினை பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது
- பிறப்புச்சான்றிதழுக்குரிய நபர்
- தந்தை அல்லது தாய்
- சட்டமுறையான பாதுகாவலர்
- பிறப்புச் சான்றிதழில் உள்ள ஏதாவது விபரம் பற்றி அதிருப்தியடைந்த நபர்
- பிரதிக்கினைக்கு வழங்கப்படவேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
- பிரதிக்கினைக்கு திருத்த உத்தேசித்த பிறப்புச்சான்றிதழின் உறுதிப்படித்தப்பட்ட பிரதியினை கட்டாயம் இணைத்தல் வேண்டும். விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்காக எழுத்து மூல சாட்சியங்ளை சமர்ப்பிக்க.
- பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்கள் சில கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.
- பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
- பிள்ளை பெயர்ப்பட்டியல் / சகோதர பெயர்ப்பட்டியல்
- தந்தை/ தாயின் பிறப்புச்சான்றிதழ்
- பெற்றோரின் விவாகத்தினை பதிவுசெய்ததன் பின் பிறந்த பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
- விவாகத்தினை பதிவுசெய்ததன் பின் பிறந்த பிள்ளை அல்லாவிடில், விடயத்திற்குரிய பிள்ளைக்கு மூத்த அல்லது இளைய பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
- வைத்தியசாலை, மகபேற்று இல்லம் என்பவற்றில் உள்ள குறிப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது மகபேற்று தாதியின் ஆவணத்தின் பிரதி.
- மாணவர் அறிக்கை, பிள்ளையினை பாடசாலையில் அனுமதித்தல் ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
- விடயதாரி மற்றும் பெற்றோரின் பெயரினை உள்ளடக்கிய வாக்காளர் பெயர் பட்டியல்
- தந்தை இறந்திருந்தால் அவரின் இறப்புச்சான்றிதழ்
அமைப்பு பற்றிய தகவல்தலைமை பதிவாளர் திணைக்களம்
இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
திரு. S.M.D.B சண்டிலிகாமா தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491 மின்னஞ்சல்:info@rgd.gov.lk இணையத்தளம்: www.rgdept.lk
| |