The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை களவு போன அல்லது காணாமல் போன கடவுச்சீட்டு – வெளிநாடு
கேள்வி விடை வகை முழு விபரம்


களவு போன அல்லது காணாமல் போன கடவுச்சீட்டு – வெளிநாடு

PDF Print Email

களவு போன அல்லது காணாமல் போன கடவுச்சீட்டு வெளிநாடு 

தங்களுடைய கடவுச்சீட்டு, காணாமல் போயிருந்தால் அல்லது, களவாடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கவேண்டியது வைத்திருப்பவரின் பொறுப்பாகும். இதனை செய்யத் தவறும் பட்சத்தில் தங்களுடைய கடவுச்சீட்டானது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பாவிக்கப்படலாம். மற்றும் இதற்கு நீங்கள் உதவிசெய்வதும் துணைபோவதுமாக இருக்கலாம்.

 

பின்பற்ற வேண்டிய படிமுறைகள் 

1.    களவாடப்பட்ட அல்லது காணாமல் போன முறைப்பாட்டு படிவம் ஒன்றினை பதிவிறக்கம் செய்யவும். 

2.  தங்கள் வதிவிடமாக கொண்ட நாட்டின் உள்ளுர் காவற்துறை பணிமனையில் ஒரு முறைப்பாட்டை 
  பதிவுசெய்து காவற்துறையினரின் அறிக்கையினை முடிந்தளவு விரைவாக பெற்றுக்கொள்ளவும். 
 
3. அண்மையில் உள்ள இலங்கை இராசதந்திர தூதரகம் அல்லது காவல்தூதர் அலுவலகத்தில் முறையாக 
  பூரணப்படுத்திய படிவத்திணையும் மற்றும் காவற்துறை அறிக்கையினையும் சமர்ப்பிக்கவும். 
 
4. களவாடப்பட்ட அல்லது தொலைந்து போன கடவுச்சீட்டு சம்பந்தமான விபரங்களை இலங்கையில் உள்ள
 குடிவரவு திணைக்களத்திற்கு இலங்கை இராசதந்திர தூதரகம் அல்லது காவற்துறை அலுவலகம்
 அனுப்பிவைக்கும். 

காணாமல் போனதும் அல்லது களவாடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கடவுச்சீட்டானது தொடர்ந்தும் பயணம் செய்வதற்கு ஏற்றதல்ல. துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கும் ரத்து சம்பந்தமான விபரங்களானது தானியங்கி நிலையாக உலகலாவிய ரீதியில் பன்னாட்டுக் குற்றப் புலனாய்வு நிறுவனம் ஊடாக பகிரப்படும்.  தொலைந்து போன கடவுச்சீட்டை மீளவும் பாவிக்க வேண்டாம் சிறமங்களை தவிர்ப்பதற்கு, நீங்கள் புதிய கடவுச்சீட்டு ஒன்றினை உடனடியாக பெறுமாறு அறிவுறுத்தப்படுகீறிர்கள்.  

இன்னொரு நபரின், தொலைந்து போன இலங்கைக் கடவுச்சீட்டை நீங்கள் கண்டெடுத்தால், அதை ஒரு உறுதியான கடித உறையிலிட்டு கீழே குறிப்பிடப்பட்ட விலாசத்திற்கு அனுப்பிவைக்கவும்.  

 

தொலைந்த /களவாடப்பட்ட கடவுச்சீட்டு சம்பந்தமான கருமபீடம்,

5ஆவது மாடி.

குடிவரவு குடியகல்வு திணைக்களம்,

இல. 41, ஆனந்த இராஜகருணா மாவத்தை,

கொழும்பு – 10 

இலங்கை. 

 

 
 

 

முக்கிய குறிப்புக்கள் 

காணாமல் போன அல்லது தொலைந்து போனதாக அறிவிக்கப்பட்ட கடவுச்சீட்டை பாவிக்க  வேண்டாம்.   

காணாமல் போன அல்லது தொலைந்து போனதாக அறிவிக்கப்பட்ட கடவுச்சீட்டானது செல்லுபடியற்றதானதும் தொடர்ந்து பாவணைக்கு ஏற்றதல்ல. 

களவாடப்பட்ட/ தொலைந்து போன கடவுச்சீட்டு ஒழுங்கமைப்பில் களவாடப்பட்ட/ தொலைந்து போன கடவுச்சீட்டு,  சம்பந்தமாக தாங்கள் வழங்கும் தரவுகள் யாவும் பதிவு செய்யப்பட்டு தானாகவே, உலகலாவிய ரீதியில் பன்னாட்டு குற்றப் புலனாய்வு நிறுவனம் ஊடாகஇ பகிரப்படும். 

தொலைந்து போய் அல்லது களவாடப்பட்டதாக. அறிவிக்கப்பட்ட பின் நீங்கள் உங்கள் கடவுச்சீட்டை கண்டெடுத்தால்,  தயவு செய்து மேலே நிரற்படுத்திய விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும்.  நீங்கள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில், எங்களுக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில்இ  நாங்கள் அதை இரத்து செய்து அதை உங்களிடம், திருப்பி கொடுப்போம்.  நீங்கள் வேண்டுகோள் விடுக்காவிட்டால், அது அழிக்கப்படும்.

ஒரு கடவுச்சீட்டானது தொலைந்து போனதாக  அல்லது களவாடப்பட்டதாக  அறிவிக்கப்பட்டிருந்தால், அது சட்டப்படி செல்லுபடியாக்க முடியாது.

 

 கவனம் 

தற்பொழுது, தங்கள் கடவுச்சீட்டானது தொலைந்து போனதாக, அல்லது களவாடப்பட்டதாக, குடிவரவு, குடியகல்வு திணைக்களம் (DIE) அல்லது இலங்கை தூதுரகம், அல்லது காவற்தூதர் பணிமனைக்கு நீங்கள் அறிவித்துள்ளீர்கள்.  

தங்களுடைய தொலைந்து போன அல்லது களவாடப்பட்ட கடவுச்சீட்டானது, சர்வதேச கொள்கைக்கு இணக்க துஷ்பிரயோகத்தை தவிர்ப்பதற்கு, பன்னாட்டு குற்றப் புலனாய்வு நிறுவனத்தின் (INTERPOL) சுற்றுலா ஆவண தரவுத்தளத்தில் கடவுச்சீட்டு இலக்கமானது, சேமித்து வைக்கப்படும். 

தற்செயலாக உங்களுடைய தொலைந்து போன அல்லது களவாடப்பட்ட கடவுச்சீட்டானது, கண்டறியப்பட்டால், அதனை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, முடிந்தளவு விரைவில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம், அல்லது அண்மையில் உள்ள இலங்கை தூதரகம் அல்லது காவற்தூதர் பணிமனைக்கு சமர்ப்பிக்கவும். 

தொலைந்து போனதாக, அல்லது களவாடப்பட்டதாக பிரகடணப்படுத்திய கடவுச்சீட்டினை நீங்கள் பயன்படுத்தினால் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் நீங்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணைகள் தொடரும். பின் தொடர்புடைய விளைவுகள், உட்பட நீங்கள் செல்லுமிடத்திற்கான விமானம் மற்றும் கப்பல் பயணத்தினை நழுவ விடுவதற்கான இழப்பிற்கு ஆளாக நேரிடும்.

 

 

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியது:

குடிவரவு, குடியகல்வு திணைக்களம்

www.immigration,gov.lk அல்லது தொலைபேசி இல: 1094115329501/2


அமைப்பு பற்றிய தகவல்

Ministry of Foreign Affairs

Republic Building

Sir Baron Jayathilake Mawatha

Colombo 1


Mr. Satya Rodrigo
தொலைபேசி:+94 112 325 372, +94 112 325373, +94 112 325 375
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 446 091, +112 333 450, +94 112 430 220
மின்னஞ்சல்:cypher@mfa.gov.lk, sfa@mfa.gov.lk
இணையத்தளம்: www.mfa.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-10-22 13:38:43
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-07-29
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 112