நல்லிணக்கப் பிரிவு
தேசிய தொழில் பிரதிநிதித்துவ பணியகத்தின் ஊடாக மற்றும் சுயமாக வெளிநாடு சென்ற ஊழியர்களினால் அல்லது அவர்களுக்குத் தோன்றியுள்ள பிரச்சினைகள் மற்றும் வேண்டுகோள்களை வினைத்திறனுடன் தீர்த்துவைப்பதில் சோர்வுற்ற தரப்பினர்க்கு ஆறுதல் அளிப்பதே இப்பிரிவின் குறிக்கோளாகும்.
செயற்படும் இடம் (பிரதான அலுவலகம்) :
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இல. 234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்த,
பத்தரமுல்ல.
தொ. இல. 0112 880500 / 0112 864113
மின்னஞ்சல் - chmn@slbfe.lk
பிரதிப்பொது முகாமையாளர் :011 2864132
முகாமையாளர் : 011 2864112
நல்லிணக்கப் பிரிவின் சேவைகள்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டு வேலையின் நிமித்தம் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் ஊழியர்கள் பொருத்தமான பணியகத்தில் குறித்த ஊழியர்களே நேரடியாகவோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ அல்லது நெறுங்கிய உறவினர்களின் மூலமாகவோ முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் அல்லது வேண்டுகோள்கள் தொடர்பாக செயற்படல்.
- முறைப்பாடுகளை / வேண்டுகோள்களை ஏற்றல் ( பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வாழ் நபர்களின் குறித்த முறைப்பாடுகள் அல்லது வேண்டுகோள்கள் மாத்திரமே அலுவலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.)
- முறைப்பாட்டுடன் அல்லது வேண்டுகோளுடன் தொடர்புடைய நபர் வெளிநாட்டுக்கு செல்ல முன்னர் பணியகத்தில் பதிவு செய்துள்ளாரா என ஆராய்ந்து பார்க்கும் போது முறைப்பாட்டாளரினால் /வேண்டுகோள் விடுப்பவரினால் முன்வைக்கப்படும் தகவல்கள் பணியக பதிவுடன் தொடர்புபடுகின்றனவா என கீழ்க்காணும் விடயங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
- தேசிய அடையாள அட்டை இலக்கம்
- வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம்
- வெளிநாட்டில் வாழ்வோரின் பெயர்கள்
- வெளிநாட்டில் வாழும் நாடு
- வெளிநாட்டுக்குச் சென்ற திகதி
- முறைப்பாடு மற்றும் வேண்டுகோள்களைப் பிரித்தறிதல்.
- பெற்றுக் கொள்ளப்பட்ட முறைப்பாடு / வேண்டுகோள்களுக்காக செயற்படல் மற்றும் அவற்றை குறித்த பிரிவிற்கு அனுப்புதல்.
- நல்லிணக்கப் பிரிவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக செயற்படல்.
விசேட குறிப்பு - அவ்வவ் முறைப்பாட்டின் தன்மைக்கேற்ப அவற்றை வினைத்திறனுடன் தீர்த்து அவர்களுக்கு ஆறுதல் அளித்தல்
தொழில் புரியும் நேரங்கள்
வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை – மு.ப. 8. 30 தொடக்கம் பி.ப.16.30 வரை
தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நீங்கள், பணியகத்தில் பதிவு செய்திருத்தல் அத்தியவசியமாகும்.
தொழிலுக்காக வெளிநாடுசெல்லும் நீங்கள் பணியகத்தில் உங்களை பதிவுசெய்தல்
கட்டாயமாகும்.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இல. 234, டன்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ள பேராசிரியர். பந்துல தொலைபேசி:+94-11-2864101-5 ,+94 11 2880500 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2880500 மின்னஞ்சல்:chmn@slbfe.lk இணையத்தளம்: www.slbfe.lk
|