விமான நிலைய அலகு மற்றும் சஹன பியச நலன்புரி நிலையம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நோக்கு மற்றும் பணிக்கூற்றினை உறுதிசெய்யும் பொருட்டு வெளிநாடு செல்லும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்தல், வெளிநாட்டில் விபத்துக்குள்ளாகும் அல்லது நோய்க்குள்ளாகும் பணியாளர்கள் நாடு திரும்பும் போது அவர்களுக்கு உதவி வழங்கல் மற்றும் வெளிநாடு செல்லும் பணியாளர்களின் சேவையைப் பொருத்து விமான நிலையத்திலேயே பதிவுகளை மேற்கொள்ளல் (முதல் முறையாக வெளிநாடு செல்வோர் தவிர்ந்த ஏனையோர்) போன்றன இதன் நோக்கங்களாகும்.
செயற்படும் தினங்கள் :
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
விமான நிலையப் பிரிவு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கட்டுநாயக்க.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
விமான நிலையப் பிரிவு
மத்தளை சர்வதேச விமான நிலையம், மத்தளை.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
சஹன பியச நலன்புரி நிலையம்,
இல. 101 5/3, நீர்கொழும்பு வீதி, கட்டுநாயக்க.
பிரதிப்பொது முகாமையாளர் - 0112259952
முகாமையாளர் - 0112259341
நிலையப் பொறுப்பதிகாரி - 0112259954
விமான நிலையத்தின் மற்றும் சஹன பியச நலன்புரி நிலையத்தின் சேவைகள்
- வெளிநாட்டிலுள்ள பணியாளர்களின் பதிவுசெய்த சேவைக்காலத்தைப் புதுப்பித்தல்.
- நோய்க்குள்ளாகி நாடு திரும்பும் பணியாளர்களுக்கான நலன்புரிச் சேவைகள்.
- வெளிநாட்டில் தொழில் புரிந்து பல்வேறு சிக்கல்கள் மற்றும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து மீண்டும் நாடு திரும்பும் பணியாளர்களுக்கு உதவிகள் வழங்குதல் (போக்குவரத்து, தங்குமிட வசதி, உணவு,வைத்திய வசதிகள் மற்றும் பயணச்செலவுகள் என்பவற்றை வழங்குதல்)
- காப்புறுதி இழப்பீட்டுக் கோரல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்புதல்.
- வெளிநாடு செல்லும் முன்னர் தேவைகள் இருப்பின், தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏதேனும் காரணத்தினால் பணியாளர் மரணிக்கும் போது மரணாதாரம் மற்றும் இதர உதவிகளை வழங்குதல்.
உத்தியோக நேரம்
நாளில் 24 மணித்தியாலமும்
தேவையான ஆவணங்கள்
பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்
(வெளிநாட்டு கடவுச்சீட்டு, மீள் நுழைதல் வீசா, பழைய வீசா)
போக்குவரத்து, தங்குமிட வசதி வழங்கல், உணவு வழங்கல்,வைத்திய வசதிகள் மற்றும் பயணச்செலவினங்ளை கோர தேவையான ஆவணங்கள்
வெளிநாடு சென்று வந்ததை உறுதிசெய்யும் எந்தவொரு ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்படும்.
தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நீங்கள் பணியகத்தில் உங்களை பதிவு செய்தல் கட்டாயமாகும்.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இல. 234, டன்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ள பேராசிரியர். பந்துல தொலைபேசி:+94-11-2864101-5 ,+94 11 2880500 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2880500 மின்னஞ்சல்:chmn@slbfe.lk இணையத்தளம்: www.slbfe.lk
|