படிப்படியான வழிமுறைகள்
படி 1: விண்ணப்பதாரர் M.T.A.34 விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்:
• மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரணச் சேவை)
• கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் (முன்னுரிமைச் சேவை)
படி 2: விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட படிவமும் அதனுடன் தேவையான
ஆவணங்களும் துணை ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்:
• மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரணச் சேவை)
• விரகேராவில் உள்ள தலைமை அலுவலகம் ?கொழும்பு (முன்னுரிமைச் சேவை)
படி 3: திணைக்களத்திடம் இருந்து அழைக்கப்படும் விண்ணப்பதாரர் எழுத்துத்
தேர்விற்கு அமர்த்தப்படுவார்.
படி 4: திணைக்களத்திடம் இருந்து அழைக்கப்படும் விண்ணப்பதாரர்
செயல்முறை தேர்விற்கு அமர்த்தப்படுவர். இந்த தேர்வில் தேர்ச்சியானது
ஆறு மாத காலம் வரை செல்லுபடியாகும்.
படி 5: விண்ணப்பதாரர் அவருடைய தற்போதுள்ள உரிமத்தை கண்காணிப்பு
அதிகாரியுடம் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 6: திணைக்களத்தில் இருந்து புதிய நீட்டிப்பு உரிமம் வெளியிடப்படும்
(உரிமம் விண்ணப்பதாரருக்கு தபாலின் மூலம் அனுப்பப்படும்.)
குறிப்பு:
எழுத்து தேர்வில் தேர்ச்சியடையாத விண்ணப்பதாரர்: விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வுக்கு ரூ100.00 செலுத்தி மூன்று முறை வரை விண்ணப்பிக்கலாம்.
செயல்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்கள்: விண்ணப்பதாரர் செயல்முறைத் தேர்வுக்கு முபுத்தொகையையும் செலுத்தி மூன்று முறை வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதி
1. எவரேனும் ஒரு விண்ணப்பதாரர் ஓட்டுனர் உரிம உரிமை வைத்திருந்தால். அவர் உரிம சான்றிதழ் பெறும் சேவையை விண்ணப்பிக்கலாம்.
2. இந்த சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டிய காரணம் என்னவெனில் தற்போதுள்ள உரிமத்தில் அங்கீகரிக்கப்படாத வேறு பல வகை வாகனங்களை ஓட்டுவதற்காக
3. ஏதேனும் ஒரு விண்ணப்பதாரர் இலங்கைக்குள் நிரந்தரமாக வசித்திருந்தால். அவர் இந்த சேவைக்கு விண்ணப்பிக்களாம்.
4. இந்த சேவையைப் பெறுவதற்கான நிபந்தனைகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது:
• விண்ணப்பதாரர் இலங்கை பிரசாவுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
• எழுத்துப் பரீட்சை மற்றும் செயல்முறை பரீட்சைக்கு அமருபவராக இருத்தல் வேண்டும்.
• எழுத்துப் பரீட்சை மற்றும் செயல்முறை பரீட்சை. ஆகிய இரண்ழற்கான அடையாளச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
• மேலே குறிப்பிட்ட இரு பரீட்சையிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• இந்த செயல்முறைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும் (“தேவையான ஆவணங்கள்” பிரிவில் சரிபாhக்கவும்).
• விண்ணப்பம் சமர்பித்தல் மற்றும் செயல்முறை பரீட்சைக்கு இருக்கும் காலம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
எந்த ஒரு விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை சந்திக்கவில்லை எனில். அவர் இந்த சேவை பெற தகுதியிலந்தவராக கருதப்படுவார்.
சமர்பிக்கும் வழிமுறைகள்
அனைத்து விண்ணப்பங்களும் நேரடியாக உரிமம் பிரிவு துணை ஆணையாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
துணை ஆணையாளர் – உரிமப் பிரிவு
வாகன போக்குவரத்து திணைக்களம்
தபால் பெட்டி எண் 533,
581-341,
எல்விட்டிகல மாவத்தை,
கொழும்பு 5
குறிப்பு 1:
விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் பெறுவதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது:
• அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரண சேவை)
• வீரஉறராவில் உள்ள முக்கிய அலுவலகம்– கொழும்பு(முன்னுரிமை சேவை)
விண்ணப்பப்படிவம்
• படிவம் “M.T.A. 34”: ஓட்டுனர் உரிம செல்லுபடி நீட்டிப்பு விண்ணப்பம்.
குறிப்பு 2:
“சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு” பிரிவை பார்க்கவும்
“இணைப்பு ஆவணங்கள்” என்ற பிரிவை பார்க்கவும்
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு:
ஒரு நாள்(முன்னுரிமை) சேவைக்கான விண்ணப்பம்: ஒரு வாரகாலத்தில் உரிமம் வழங்கப்படும்.
சாதாரண சேவைக்கான விண்ணப்பம்: 2 வாரகாலம் முதல் 3 மாதங்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:
விண்ணப்பப்படிவங்கள் பெறுதலும் சமர்ப்பித்தலும்:
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9:30 மணி முதல் பி.ப 3:30 மணி வரை (சாதாரண சேவை)
கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9:30 மணி முதல் பி.ப12:30 மணி வரை (முன்னுரிமைச் சேவை)
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
குறிப்பு:
ஒரு நாள் செயல்முறையில் விண்ணப்பதாரர் என்று படிவத்தை சமர்ப்பிக்கிறார்களோ அன்றே அவர்களுடைய புதிய நீட்டிப்புப் பதிவுச் சான்றிதழை பி.ப 3.30 மணிக்கு மேல் பெறலாம்.
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கோடு:
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு ஆறு மாதங்கள் கழித்து செயல்முறை தேர்வு செய்திருந்தால் விண்ணப்பம் காலாவதியாகிவிடும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
கட்டண விபரம்:
விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும்
கட்டணம்:
சேவை வகைகள் |
முதல் வகுப்பு வாகனங்கள் |
இரண்டாவது வகுப்பு வாகனங்கள் |
சாதாரவைணச் சேவை |
Rs. 520.00 |
Rs. 1020.00 |
முன்னுரிமை சேவை |
Rs. 770.00 |
Rs. 1720.00 |
அபராதம்:
உரிமம் பெறுவதற்கான செயல்களுக்கு அபராதம் இல்லை
இதர கட்டணம்:
• விண்ணப்பதாரர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறாமல் மறு விண்ணப்பத்திற்கு விண்ணப்பித்தால் ரூ 100.00 செலுத்த வேண்டும். (மூன்று முறை மட்டுமே மறு விண்ணப்பம் செய்யலாம்.)
• விண்ணப்பதாரர் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெறாமல் மறுவிண்ணப்பத்திற்கு விண்ணப்பித்திருந்தால் அவர் முபுத்தொகையையும் கண்டிப்பாக செலுத்த வேண்டும். (மூன்று முறை மட்டுமே மறுவிண்ணப்பம் செய்யலாம்.)
தேவையான இணைப்பு ஆவணங்கள்
1. தேசிய அடையாள அட்டை - தேசிய அயைடாள அட்டை இலக்கமிடப்பட்ட கடவுச்சீட்டின்; அசல் மற்றும் உண்மைப் பிரதி.;.
2. MBBS சான்று பெற்ற மருத்துவ அதிகாரியிடம் இருந்து மருத்துவ சான்றிதழ்
3. தற்போதைய ஓட்டுனர் உரிமம்.
• பேருந்து அல்லது லாரிக்கான உரிமம் பெற விண்ணப்பம்:
• C.T.B மருத்துவ நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் மருத்துவச் சான்றிதழ்
• கிரேடு “A” பெற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளியிலிருந்து இருந்து பெறப்பட்ட திறனறிச் சான்றிதழ்
• 2 * 2 ½” அளவில் உள்ள கருப்பு வெள்ளை மூன்று நிழற்படங்கள்;.
சேவைகான பொறுப்புக் குழு
பதிவி |
பெயர் |
பிரிவு |
தொலைபேசி |
கூடுதல் துணை ஆணையாளர் |
திரு. கண்ணங்கரா |
ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு |
2556856/2516404 |
துணை ஆணையாளர் |
திருமதி. சந்திரா கருணசேனா |
ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு |
|
மேற்பார்வை அலுவலர் |
திரு. சோமசிரி ஹபெர்னாண்டோ |
ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு |
|
சிறப்பு வகையறைகள்
• விண்ணப்பதாரர் எழுத அல்லது படிக்கத் தெரியாதவராக இருந்தால்:
1. அவர்கள் எழுத்து தேர்விற்கு மூன்று முறை கண்டிப்பாக அமர்த்தப்படுவர்.
2. கிராம சேவகரிடமிருந்து சான்றிதழ் பெறுதல்.
3. எழுத்து தேர்விற்கு பதிலாக பேச்சுத் தேர்விற்கு விண்ணப்பம் செய்தல்.
• விண்ணப்பதாரர் செயல்முறை தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருந்து மற்றும்
• கனரக வாகனத்திற்கான உரிமம் பெற அவர் விண்ணப்பம் செய்திருந்தால்:
விண்ணப்பதாரர் செயல்முறை தேர்விற்கு 14 நாட்களுக்குள் மறுமுறை டிதப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்.
• இலகுரக வாகனத்திற்கான உரிமம் பெற அவர் விண்ணப்பம் செய்திருந்தால் விண்ணப்பதாரர் செயல்முறை தேர்விற்கு 7 நாட்களுக்குள் மறுமுறை விண்ணப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்
போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம் M.T.A.34
அமைப்பு பற்றிய தகவல்மோட்டார் வாகனத் திணைக்களம்
இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.
திரு. B. விஜயரத்னா தொலைபேசி:011-2698717 தொலைநகல் இலக்கங்கள்:011-2694338 மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk இணையத்தளம்: www.dmt.gov.lk
|