படிப்படியான வழிமுறைகள்
படி 1: விண்ணப்பதாரர் “M.T.A. 38” படிவங்களை கீழ்க்கண்ட இடத்திலிருந்து பெறுதல்
• மாவட்ட காரியதரிசி அலுவலகங்கள் (சாதாரண சேவை)
• கொழும்பில்லுள்ள தலைமை அலுவலகம் (முன்னுரிமை சேவை)
படி 2: விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம். நடப்பு உரிமம் மற்றும் தேவையான ஆவணங்களோடு கீழ்க்கண்ட ஆணையாளரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்:
• மாவட்ட காரியதரிசி அலுவலகங்கள் (சாதாரண சேவை)
• கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் (முன்னுரிமை சேவை)
படி 3: கொடுக்கபட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று திணைக்களம் சரி செய்ய வேண்டும்.
படி 4: தற்காலிக உரிமத்தை திணைக்களம் விநியோகம் செய்யும்
படி 5: தற்காலிக உரிமத்தை திணைக்களம் உதவி ஆணையாளரிடம் அனுப்ப வேண்டும்
படி 6: உதவி ஆணையாளர் புதிய உரிமத்திற்கான புதிய அடையாள அட்டை இலக்கம் விநியோகம் செய்ய வேண்டும்.
படி 7: உரிமத்தை அச்சு செய்வதற்காக உத்தரவு அனுப்புதல்;
குறிப்பு:
சான்றிதழ்கள் சரியாக இல்லைடியன்று நிருபிக்கபட்டால்:
விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தகுதி
வாகன உரிமத்தை கொண்டுள்ள எந்த ஒரு விண்ணப்பதாரரும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து பின் வரும் சந்தர்ப்பங்களில் இச்சேவைக்காக விண்ணப்பிக்க முழயும்.
• உரிமத்திற்குள் குறிப்பிடப்பட்டுள்ள வாகத்தின் பிரிவை மாற்றுவது (நீட்டிப்பது)
• உரிமையாளரின் பெயரை மாற்றுவது
• உரிமையாளரின் விலாசத்தை மாற்றுவது
விண்ணப்பதாரர் இச்சேவையை பெற தகுதி அடைவதற்கு கீழ்கண்ட கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டும்:
• ஓட்டுநர் உரிமத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்
• செயல்முறைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் (ஆவணத் தேவை பகுதியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.)
குறிப்பு:
எந்தவொரு விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்ட கட்டுபாடுகளுக்கு அப்;பாற்பட்டு இருக்கிறாரோ அவர் இச்சேவையை பெறுவதற்கான தகுதியை இர்ப்பதாக கருதப்படுகிறார்.
சமர்ப்பிக்கும் முறைகள்
எல்லா விண்ணப்பங்களும் உரிம பிரிவில் உள்ள ஆணையாளரிடம் நேரடியாக கொடுக்க வேண்டும்.
ஆணையாளர் – வாகன போக்குவரத்து திணைக்களம்.
தபால் பெட்டி இலக்கம் 533,
581-341,
எல்விட்டிகாலா மாவத்தை.
கொழும்பு 5
குறிப்பு 1:
கீழ் கொடுக்கப்பட்டுள்ளதன் மூலமாக விண்ணப்பதாரர் உரிமம் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளதுஃ
• எல்லா மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரண சேவை)
• கொழும்பில்லுள்ள தலைமை அலுவலகம் (முன்னுரிமை சேவை) கொழும்பில்லுள்ள
குறிப்பு 2:
“சமர்பிக்க வேண்டிய காலக்கோடு” பகுதியை பார்க்கவும்
“இணைப்பு ஆவணங்கள்” பகுதியை பார்க்கவும்
விண்ணப்ப படிவம்
• படிவம் “ஆ.வு.யு. 38”: நடப்பு வாகன உரிமத்தை மாற்றி புதிய வாகன உரிமை அட்டையை வழங்குதல்
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு:
முன்னுரிமை சேவையின் அழப்படையில் விண்ணப்பிப்பது: உரிமம் ஒரு வாரத்திற்குள் விநிநோயகம் செய்ய வேண்டும்.
சாதாரண சேவைகளின் அழப்படையில் விண்ணப்பிப்பது: உரிமம் மூன்று மாதத்திற்குள் விநியோகம் செய்ய வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:
பெறுதல் மற்றும் சமர்ப்பித்தலுக்கான விண்ணப்ப படிவங்கள்
வேலை நாட்கள்: திங்கள் முதல் வெள்ளி வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9:30 மணி முதல் பி.ப 3:30 மணி வரை (சாதாரணமாக)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9:30 மணி முதல் பி.ப மணி வரை (முன்னுரிமை)
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
குறிப்பு:
ஒரு நாள் சேவைத்திட்டத்தில். விண்ணப்பதாரர்கள் படிவம் சமர்ப்பித்த அன்றே பி.ப 3.30 மணிக்கு மேல் புதிய உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு:
விண்ணப்பத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலமானது செயல்முறைகள் முழவடையும்; வரையிலும் மற்றும் திருத்தப்பட்ட உரிமம் வழங்கும் வரையிலும் நீடிக்கப்படும்
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்:
விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்
கட்டணம்:
சேவைகளின் வகை திருத்தப்பட்ட உரிமத்தை வழங்குதல்
சாதாரன சேவை ரூபா. 370.00
முன்னுரிமை சேவை ரூபா. 520.00
அபராதம்:
இந்த சேவைக்கு அபராதங்கள் எதுவும் இல்லை.
இதரக்கட்டணம்:
இந்த சேவையைப் பெறுவதற்கு வுடுதல் செலவீனங்கள் எதுவும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• தற்போதைய ஓட்டுனர் உரிமம்
• திருத்தப்பட்ட தகவலை குறிப்பிட்டு கிராம சேவகரின் கழதத்தைப்; பெறுதல்;
• 2*2 ½” அளவில் இரண்டு கருப்பு வெள்ளை நிர்ற்படங்களில், ஒரு நிர்ற்படத்தின் பின்புறம் கிராம நிலதிகாரியிடம் அத்தாட்ச்சி (கைடியபுத்து) பெற்றிருக்க வேண்டும்.
சேவைக்கான பொறுப்புக் குழு
பதிவி |
பெயர் |
பிரிவு |
தொலைபேசி |
ஆணையாளர் |
திரு. B. விஜரத்னே |
பொது |
2698717 |
கூடுதல் துணை ஆணையாளர் |
திரு. கண்ணங்கரா |
ஓட்டுனர் வழங்கும் பிரிவு |
2556856/2516404 |
துணை ஆணையாளர் |
திருமதி. சந்திரா கருணசேனா |
ஓட்டுனர் வழங்கும் பிரிவு |
- |
மேற்பார்வை அலுவலர் |
திரு. சோமசிரி ஹபெர்னாண்டோ |
ஓட்டுனர் வழங்கும் பிரிவு |
- |
சிறப்பு வகையறைகள்
இந்த சேவைக்கு விண்ணப்பிப்பதற்கு எந்த சிறப்பு நிபந்தனையும் இல்லை.
போலியான தரவுகளுடன் "மாதிரி ஆ.வு.யு. 38"
அமைப்பு பற்றிய தகவல்மோட்டார் வாகனத் திணைக்களம்
இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.
திரு. B. விஜயரத்னா தொலைபேசி:011-2698717 தொலைநகல் இலக்கங்கள்:011-2694338 மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk இணையத்தளம்: www.dmt.gov.lk
|