வருகைதரலுக்கான வீசா அனுமதிப் பத்திரங்கள்
சுற்றுலாவுக்கான வருகைதரல் வீசா
தயவுசெய்து http://www.eta.gov.lk எனும் இணையத் தளத்திற்கு செல்லவும்
எனது சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதெப்படி?
குடிவரவு அலுவலர்களால் நாட்டுக்குள் பிரவேசிக்கும் விமான நிலையத்தில் வழங்கப்படுகின்ற நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப் பத்திரங்கள் குறிப்பிட்டுள்ள கால எல்லைக்குள் இலங்கைக்குள் பிரவேசிக்கின்ற நல்லெண்ணம் கொண்ட உல்லாசப் பிரயாணி ஒவ்வொருவரும் அவ்வனுமதிப் பத்திரம் தீர்வதற்கு முன்னராக வீசாவை நீடித்துக் கொள்வதற்காக விண்ணப்பிக்கலாம். தொடக்கத்தில் வழங்கிய 30 நாட்கள் காலப் பகுதியை நீடித்துக்கொள்ள அவசியமெனில் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தினால் இரண்டு (02) மாத கால நீடிப்பினை வழங்க முடியும். எவ்வாறாயினும் மேலும் நீடிப்பு தொடர்பாக நியாயமான காரணங்களின் பேரில் மாத்திரமே பரிசீலித்துப் பார்க்கலாம். இந்த மட்டுப்பாடு முன்னாள் இலங்கையர்களுக்கு ஏற்புடையதன்று.
சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை நான் எவ்வாறு எங்கிருந்து பெற்றுக்கொள்ள முடியும்?
- கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
- அச்சிடக்கூடிய விண்ணப்பப் பத்திரங்களை இங்கே பதிவிறக்கம் செய்க.
எனது சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை ?
இலங்கையில் நீங்கள் தங்கி இருக்கக் கருதுகின்ற காலப் பகுதி உங்களின் பயண ஆவணங்களின் திகதி காலவதியாக குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் முடிவுற வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
“சுகுறுபாயா”, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை. திரு. கே.ஏ.ரீ.கே. ரூப்பரத்ன தொலைபேசி:+94-11-5329000 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2885358 மின்னஞ்சல்:controller@immigration.gov.lk இணையத்தளம்: www.immigration.gov.lk
|