தகுதி
• விண்ணப்பதார் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு திரும்பியவராக இருக்கவேண்டும்.
• வாகனம் பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்
• ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடியப் பதிவுச் சான்றிதழ்.
• கடவுச்சீட்டின் பிரதிகள் (கடவுச்சீட்டு வைத்திருப்பவரின் புகைப்படம், வந்து சேர்வதுக் குறித்த புறக்குறிப்பு மற்றும் வேலைவாய்ப்பின் கால அளவை குறிக்கும் கடவுச்சீட்டின் பக்கங்கள்)
• வாகனம் வலது புறமாக ஓட்டக்கூடியதாக இருக்க வேண்டும்.
• வாகன இசைவின் போது விண்ணப்பதாரர் அவருடைய கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
• உரிமம் வைத்திருப்பவரின் பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மூன்று வருடங்கள் வரை உரிமமானது மாற்றத்தக்கதாக இருக்கக் கூடாது.
• ஐந்து வருடங்களுக்கொருமுறை இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படும்.
• குளோரோ புளோரோ கார்பனுடன் கூடிய குளிர் சாதன வசதியுடன் உள்ள வாகனங்கள் இறக்குமதிச் செய்ய அனுமதிக்கப்படமாட்டது.
5 வருட ஆயுட்காலமுடைய பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களை இறக்குமதிச் செய்தல்.
• மூன்று வருடங்களுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை செய்ததற்கான மற்றும் வெளிநாட்டில் பொருட்கள் ஈட்டியதற்கான ஆதாரங்கள்.
• மோட்டார் வாகனம் விண்ணப்பதாரின் பெயரில் (ஆண்/பெண்) பதிவுச் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் (ஆண்/பெண்) விண்ணப்பதாரர் புறப்படுவதற்கு முந்தைய ஒரு வருடக் காலத்திற்கு மேல் வாகனத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
• முதல் பதிவிலிருந்து ஐந்து வருடத்திற்கு மேல் மோட்டார் வாகனத்தின் ஆயுட்காலம் இருக்கக் கூடாது.
05 முதல் 10 வருட காலம் பயன்படுத்தப்பட்ட மோட்டார் கார்களின் இறக்குமதி.
• ஐந்து வருடங்களுக்குக் குறையாமல் வெளிநாட்டில் வேலை செய்த மற்றும் வெளிநாட்டில் பொருளீட்டியதற்கான ஆதாரம்.
• மோட்டர் காரானது விண்ணப்பதாரரின் பெயரில் பதிவுச் செய்யப்பட்டதாகவும், விண்ணப்பதாரால் ஆண்/பெண் 03 வருடங்களுக்கு மிகாமல் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
• முதல் பதிவுத் திகதியிலிருந்து மோட்டார் வாகனத்தின் ஆயுட்காலம் 10 வருடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது
தேவையான இணைப்பு ஆவணங்கள்
- சரக்குக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவு மாதிரிப் படிவத்தின் 4 பிரதிகள்
- இடாப்பின் 4 பிரதிகள்
- பதிவுச் சான்றிதழின் பிரதி
- இலங்கையில் வசிப்பதற்கான நோக்கம் மற்றும் தன்னிலை விளக்கங்களுடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலம்.
- வாகன இடாப்பு சீட்டின் பிரதி
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் காசாளரிடமிருந்துப் பெறப்பட்ட ஒப்புதல்
- வாகனத்தின் புகைப்படம்
- பின்வருவனவற்றை உள்ளடக்கிய கடவுச்சீட்டு பக்கங்களின் பிரதிகள்.
---பெயர்
---கடவுச்சீட்டு காலாவதியாகும் திகதி
---இலங்கையிலிருந்து புறப்படும் நாள்
---இலங்கைக்கு வந்து சேரும் நாள்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் வங்கிகளில் சேமிக்கப்பட்ட அந்நிய செலவானி பற்றிய வங்கி அறிக்கை ஆதாரம்.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்களைப் பெறுதல்
கரூமபீடம் – பிரிவு 02
கட்டணத்தைச் செலுத்தல்
கரூமபீடம் – காசாளர்
விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்.
கரூமபீடம் – பிரிவு 02
விண்ணப்பப்படிவங்கள்
• வெளிநாட்டில் ஈட்டப்பட்ட அந்நிய செலவானியின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் உரிமங்களுக்கான விண்ணப்பங்கள்
சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவின் மாதிரிப் படிவம்.
படிப்படியான வழிமுறைகள்
படி 1
பிரிவு 02லிருந்து விண்ணப்பப்படிவத்தை பெறுதல்
படி 2
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான இணைப்பு ஆவணங்களைப் பிரிவு 02ல் சமர்ப்பித்தல்
சரியான முறையில் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்து இணைப்பு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டால் விண்ணப்பதாரர் காசாளரிடம் அனுப்பப்படுவர்.
படி 4
விண்ணப்பதாரர் உரிமக் கட்டணத்தைக் காசாளரிடம் செலுத்தி இடாப்பைப் பிரிவு 02ல் சமர்ப்பித்தல்
படி 5
உரிமம் வழங்குதல்
குறிப்பு
• தேவையான இணைப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கபடாமலிருந்தால் விடுபட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரருக்கு தெரிவித்தல்.
• விண்ணப்பப்படிவம் சரியாக பூர்த்திச் செய்யப்படவில்லையெனில் விண்ணப்பப்படிவங்களை பூர்த்திச் செய்வதற்கு உதவிச் செய்தல்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஒன்று முதல் இரண்டு நாட்கள்
சமர்ப்பிக்கும் காலக்கோடு
விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்களைப் பெறுதல்
கருமபீடம் – பிரிவு 02
நேரம் – மு.ப 9.00 முதல் பி.ப. 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் –பொது மற்றும் வணிக நாட்கள்
கட்டணத்தை செலுத்துதல்
கருமபீடம் - காசாளர்
நேரம் – மு.ப 9.00 முதல் பி.ப. 3.00 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் –பொது மற்றும் வணிக நாட்கள்
விண்ணப்பபடிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்பித்தல்
கருமபீடம் – பிரிவு 02
நேரம் – மு.ப 9.00 முதல் பி.ப. 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலக்கோடு
இந்தச் சேவைக்காக ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு மூன்று மாதங்கள்
குறிப்பு:
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலத்தை நீட்டிக்க வேண்டுமெனில் விண்ணப்பதாரர் ஆண்/பெண் தகுந்தக் காரணங்களை வழங்க வேண்டும். அந்த வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளிப்பதைக் கட்டுப்பாட்டாளர் முடிவுச் செய்வார்
சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்
கட்டணம்
வாகனத்தின் ஆயுட்காலத்தைப் பொருத்து கட்டணத்தின், சதவிகிமானது வாகனத்தின் மொத்த மதிப்பிலிருந்து கீழேக் குறிப்பிடப்பட்டுள்ளபடி இருக்கும்.
அபரதங்கள்
வாகன இசைவு நேரத்தின் போது உரிமம் வைத்திருப்பவர் அவருடைய கடவுச் சீட்டை ஓப்படைக்கத் தவறியிருந்தால் அவருடைய உரிமம் ரத்துச் செய்யப்படும் மற்றும் வாகனம் பறிமுதல்
இதர கட்டணம்
பொருந்தாது
05 வருடகாலத்திற்கு குறையாமல் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் இறக்குமதி
• 03 வருடகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை செய்த மற்றும் பொருளீட்டியதற்கான ஆதாரம்
05 முதல் 10 வருடகாலம் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் இறக்குமதி
• 05 வருடங்களுக்குக் குறையாமல் வெளிநாட்டில் வேலை செய்த மற்றும் பொருளீட்டியதற்கான ஆதாரம்.
சிறப்பு வகையறைகள்
• ஏதேனும் ஒரு வகையில் விண்ணப்பதாரர் தனது செல்லுபடி காலத்தை நீட்டிக்க விரும்பினால், அந்த வேண்டுகோள் கட்டுப்பாட்டாளரிடம் அனுப்பப்படும். கட்டுப்பாட்டாளர் வேண்டுகோளைச் சோதனையிடுவார் மற்றும் வேண்டுகோளைக் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பார்.
• இறக்குமதிச் செய்யப்படும் பொருட்களின் மதிப்பு சரக்குப் பட்டியலிலுள்ள மதிப்பைத் தாண்டிச் சென்றால், பற்று பெறப்படும் சமயத்தில் அந்த வித்தியாசம் செலுத்தப்பட வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01 திரு.W.A.R.H. வன்ஸதிலக தொலைபேசி:+94-11-2326774 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2328486 மின்னஞ்சல்:imexport@sltnet.lk இணையத்தளம்: www.imexport.gov.lk
|