தகுதி
• இறக்குமதியாளரிடம் செல்லுபடியாகும் உரிமம் இருத்தல் வேண்டும்
• இறக்குமதியாளர் உரிமத்தின் நிபந்தனைகளுக்கு கீழ்படிந்தவராக இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
• உரிமம் காலாவதி ஆகிவிட்டால், தாமதத்திற்கான தகுந்த காரணத்தை கூறியக் கடிதத்தை வழங்க வேண்டும்.
• இறக்குமதியாளர் உரிமத்தின் நிபந்தனைகளை மீறினால், இறக்குமதி / ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் அங்கீகாரத்தின் கீழ் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
இணைப்பு ஆவணங்கள்
• சரக்கு ஏற்றியதற்கான பற்றுச் சீட்டு
• இடாப்புகள்
• உறுதிமொழிப் படிவம்
• வேறு இறக்குமதி ஆவணங்கள்.
• வங்கி ஆவணங்கள்
சமர்ப்பிக்கும் முறைகள்
கட்டணத்தைச் செலுத்துதல்
கருமபீடம் - காசாளர்
விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம், மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல்.
கருமபீடம் – பகுதி 03
விண்ணப்பப்படிவங்கள்
இந்தச் சேவைக்கு விண்ணப்பங்கள் இல்லை. வேண்டுகோள் கடிதம் மற்றும் இணைப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
படிப்படியான வழிமுறைகள்
படி 01:
இறக்குமதியாளர் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தல்
படி 02:
உரிம விபரத்துடன் அனைத்து இணைப்பு ஆவணங்களையும் பிரிவு 03 சரிபார்த்தல்.
படி 03:
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களால் திருப்தி ஏற்படின், துணைக் கட்டுப்பாட்டாளரின் அங்கீகாரத்துடன் இறக்குமதிச் செய்யப்பட்டப் பொருட்களை ஒப்புதலிடல்.
படி 04:
இறக்குமதியாளரிடம் ஒப்புதல் ஆவணங்கள் வழங்கப்படும். ஒப்புதல் ஆவணத்தின் ஒரு பிரதித் திணைக்களத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக வைக்கப்படும்.
குறிப்பு :
• இறக்குமதியாளர் உரிமத்தின் நிபந்கனைகளுக்கு உண்மையாகயில்லை எனில், துணைக் கட்டுப்பாட்டாளர் கூடுதல் உரிமக் கட்டணத்தை விதிப்பார்.
• ஏதேனும் ஒரு காரணத்தால் உரிமத்தின் மதிப்பை இறக்குமதியின் மதிப்பு ஒத்துப் போகவில்லை எனில், இறக்குமதி/ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் கூடுதல் கட்டணத்தை இறக்குமதியாளருக்கு விதிப்பார்.
• உரிமத்தின் காலம் இறக்குமதியின் காலத்துடன் சமமாகவில்லை எனில், இறக்குமதியாளர் திருத்தப்பட்ட உரிமத்திற்காக வேண்டுகோள் கடிதத்துடன் வேண்டுதலிட வேண்டும்.
• உரிமத்தில் உள்ள பொருட்கள் இறக்குமதிப் பொருட்களுடன் ஒத்துப்போகவில்லை எனில் திருத்துதல் உரிமம் பெறப்பட வேண்டும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
ஒரு நாளுக்குள்ளாக
சமர்ப்பிக்க வேண்டியக் காலக்கோடு
விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்கள் பெறுதல்
கருமபீடம் – பிரிவு 03
நேரம் – முப 9.00 முதல் பிப.4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்
பணத்தைச் செலுத்துதல்
கருமபீடம் - காசாளர்
நேரம் – முப 9.00 முதல் பிப.3.00 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்
விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
கருமபீடம் – பிரிவு 03
நேரம் – முப 9.00 முதல் பிப.4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
உரிமத்தின் காலம் வரை இறக்குமதியாளர் சேவைக்காக வேண்டுகோள் விடுக்கலாம்
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்
விண்ணப்பப்படிவத்தைப் பெறக் கட்டணம் ஏதுமில்லை.
கட்டணம்
கட்டணம் இல்லை.
அபராதங்கள்
உரிம நிபந்தனைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதம் வகைக்கு வகை மாறுபடும்.
குறிப்பு:
உரிமம் இல்லாமல் இறக்குமதியாளர் பொருட்களை இறக்குமதிச் செய்தால், இறக்குமதியாளரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்.
இதரக்கட்டணம்
உரிமத்தின் மதிப்பு இடாப்புவின் மதிப்பைவிட அதிகமானால், திணைக்களம் அதிகமானதற்கானக் கட்டணத்தை விதிக்கும்.
சிறப்பு வகையறைகள்
இறக்குமதியாளர் உரிமம் இல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்திருந்தால், பொருட்கள் பெறும் உரிமம் அபராதத்துடன் வழங்கப்படும். பொருட்கள் பெறும் உரிமத்திற்கு கீழ்க்காணும் ஆவணங்கள் தேவை.
• சுங்க ஆவணங்கள்
• விளக்கக் கடிதம்
• சம்பந்தபட்ட குழுமத்திடமிருந்துப் பெறப்பட்ட ஒப்புதல் கடிதம்
அமைப்பு பற்றிய தகவல்இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01 திரு.W.A.R.H. வன்ஸதிலக தொலைபேசி:+94-11-2326774 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2328486 மின்னஞ்சல்:imexport@sltnet.lk இணையத்தளம்: www.imexport.gov.lk
|