சேவையைப் பெற்றுக்கொள்ள இருக்க வேண்டிய தகைமைகள்:
கிடையாது.
சேவை பற்றிய விபரங்கள்
புகையிரதப் பெட்டியொன்றை ஒதுக்கிக் கொடுத்தலானது புகையிரதத் தலைமையக வணிக அத்தியட்சகர் அலுவலகம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது. (தொலைபேசி இலக்கம் 011-2320109)
சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம்
இவ்விபரப் புத்தகத்தில் 3வது அத்தியாயத்தில் இணைக்கப்பட்டுள்ள 2.2 (அ) இலக்கமுடைய படிவத்தைப் பூர்த்தி செய்து புகையிரத தலைமையகத்தின் வணிக அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இன்றேல் நிறுவனத்தின் பெயர் பயணிகள் எண்ணிக்கை சேர்விடங்கள் மற்றும் பயணஞ் செய்ய உத்தேசித்துள்ள திகதிகளைக் குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்பி வைப்பதன் மூலமாகவூம் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
விண்ணப்பப் பத்திரத்திற்கான கட்டணம்:-
கிடையாது.
சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நேரங்கள்:-
கிழமை நாட்களில் காலை 09.00 மணியில் இருந்து மாலை 04.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்
ஆசனமொன்றுக்கான கட்டணம்
முதலாம் வகுப்பு ரூ.125.00
இரண்டாம் வகுப்பு ரூ.100.00
மூன்றாம் வகுப்பு ரூ. 75.00
சேவையை பெற்றுக்கொள்ள எடுக்கும் காலம்
விண்ணப்பபப் பத்திரம் கிடைத்த பின்னர் புகையிரதக் கூடமொன்றை ஒதுக்கிக்கொள்ளக்கூடிய இயலுமை பற்றி பரிசீலனை செய்து அது பற்றி விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கட்டணத்தை அண்மையில் உள்ள புகையிரத நிலையத்திற்கு செலுத்தியதன் பின்னர் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியூம். 02 வாரங்களுக்குள் கொடுப்பனவினை மேற்கொள்ள வேண்டும்.
சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
கிடையாது.
விண்ணப்பப் பத்திரத்தை அனுப்பி வைத்தால் போதுமானது.
பொறுப்பு வகிக்கும் உத்தியோகத்தர்
பதவி |
பெயர் |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
வணிக அத்தியட்சகர் |
திரு. விஜய சமரசிங்க
|
+94-11-2320109 |
+94-11-2320109 |
com@railway.gov.lk |
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை புகையிரதத் திணைக்களம்
புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு. திரு. எல்.பி.எச். வடுகே தொலைபேசி:+94 11 2 421281 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|