சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட அவசியப்பாடுகள்
கிடையாது.
சேவை பற்றிய விபரம்
புகையிரத சேவையின் சட்டதிட்டங்களுக்கிணங்க கொண்டுசெல்ல இயலாத பண்டங்களைத் தவிர்ந்த ஏனைய சகல விதமான பண்டங்களையூம் பொதிகளாக புகையிரதம் மூலமாக கொண்டு செல்லலாம்.
சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விதம்
கொண்டுசெல்ல வேண்டிய பொதிகளை புகையிரத நிலையத்திற்கு ஒப்படைப்பதன் மூலமாக.
விண்ணப்பப் பத்த்திரக் கட்டணம்
கிடையாது
சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கால எல்லை
கிழமை நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இக்கட்டணங்கள் 1512ஃ03 ஆம் இலக்கமுடைய அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது.
சேவையை வழங்க எடுக்கும் காலம்
15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரையான காலப்பகுதி மாத்திரமே.
சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய பதிவேடுகள்
தேசிய அடையாள அட்டை.
பொதியில் அடங்கியூள்ள பண்டம் அதிக விலைமதிப்பு உடையதாயின் விலைகளைக் குறிப்பிட்ட பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை புகையிரதத் திணைக்களம்
புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு. திரு. எல்.பி.எச். வடுகே தொலைபேசி:+94 11 2 421281 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|