நீங்கள் இருப்பது இங்கே:வலைமனை சமுர்த்தி கடன் பெறல்
சமுர்த்தி கடன் பெறல்
சமுர்த்தி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கான முக்கிய நோக்கம் என்னவெனில் சமுர்த்தி வங்கியின் மூலம் பயன்பெறும் குடும்பத்தினருக்கு உடனடி கடன்களை வழங்குவதற்காகும். பின்வரும் பல வகைப்பட்ட கடன் திட்டங்கள் சமுர்த்தி வங்கியில் உள்ளன.
சுய-வேலைவாய்ப்பு கடன்
நுகர்வோர் கடன்
விவசாய கடன்
மீன்பிடி தொழிலுக்கான கடன்
விபத்து கடன்
ஜனபுபுது கடன்
சுவசக்தி கடன்
தகுதி
அனைத்து விண்ணப்பதாரர்களும் சமுர்த்தி சமுதாயத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும்
விண்ணப்பதாரர் 5 பேர் கொண்ட குழுவில் ஒருவராக இருக்க வேண்டும்
(குழுவில் அனைத்து உறுப்பினர்களும் பங்கு வைத்திருக்க வேண்டும்)
விண்ணப்பதாரரின் சேமிப்பு பங்கானது ரூ.500.00 மேல் இருக்க வேண்டும்
விண்ணப்பதாரர் சமுர்த்தி வங்கியில் சேமிப்பு வைத்திருக்க வேண்டும்
கடன் தொகையானது ரூ. 5000 முதல் ரூ. 100இ000 வரை
விண்ணப்பதாரரின் சேமிப்பு பங்கானது ரூ.500.00 மேல் இருக்க வேண்டும்
குழுவின் சேமிப்பானது வேண்டப்படும் கடன்தொகையில் 25மூ இருக்க வேண்டும்
முன்னதாகவே விண்ணப்பதாரர் சமூர்த்திக் கடனுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
குறிப்பு:
(தகுதி இல்லாத வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படும். வேறு காரணங்களுக்குகாக வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால் அதற்குறியை காரணம் குறிப்பிடப்படும்.)
• விண்ணப்பத்தை சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் ரத்துச் செய்வார்.
• அனைத்து குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமை.
• குழு உறுப்பினர்களுடைய செலுத்தப்படாத கடன்.
• சமுர்த்தி வங்கி எந்த விதிமுறைகளிலும் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கும்.
எ.கா சரியான முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்.
சமர்ப்பிக்கும் முறைகள்
எல்லா கடன்களுக்குமானது
• விண்ணப்பத்தை எங்கு பெறலாம் ஃ வேண்டப்படும் இடங்கள்
விண்ணப்பத்தை சமுர்த்தி சேவகர் அல்லது சமுர்த்தி வங்கிக்கு சென்று பெற்று கொள்ளலாம்.
• விண்ணப்பத்தை எங்கே சமர்பிப்பது
விண்ணப்பங்கள் சமுர்த்தி சேவகரிடம் அல்லது சமுர்த்தி வங்கிக்கு சென்று சமர்பிக்கபடலாம
• விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய இடம்
விண்ணப்பம் சமூர்த்தி சேவகரிடம் அல்லது சமூர்த்தி வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
• யாரிடம் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்
சமுர்த்தி வங்கி மேலாளரிடம் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்
விண்ணப்பப்படிவங்கள்
ஒவ்வொரு சேமிப்பு கணக்கிற்கும் தனிப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் உள்ளன அவை பின் வருமாறு
1. சுயத்தொழில் கடனுக்கான விண்ணப்பம்.
2. விவசாயக் கடனுக்கான விண்ணப்பம்
3. நுகர்வோர் கடனுக்கான விண்ணப்பம்
4. மீன்வளக் கடனுக்கான விண்ணப்பம்
5. விபத்து கடனுக்கான விண்ணப்பம்.
படிப்படியான வழிமுறைகள்:
படி 1: விண்ணப்பத்தை சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் அல்லது சமூர்த்தி வங்கியிலிருந்து விண்ணப்பதாரர் பெறலாம்.
படி 2: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடம் ஒப்படைத்தல்.
படி 3: சமுர்த்தி வங்கியிடம் ஒப்புதல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் ஒப்படைத்தல்.
குறிப்பு:
சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் விண்ணப்பத்தை ஒப்புக்கொள்ளவில்லை எனில் விண்ணப்பதாரர் தள்ளுபடி செய்யப்படுவார்.
படி 4: வங்கி பேரேடு மற்றும் பிற ஆவணங்களும் வங்கி எழுத்து விளைஞர் செல்லுபடியை சரிப்பார்த்தல்.
படி 5: சம்பந்தப்பட்ட சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுக் குழு ஆணையர் கடன் வழங்குதலை அங்கீகரித்தல்.
குறிப்பு:
விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டால், சமுர்த்தி வங்கி தள்ளுபடி செய்தற்கான காரணத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை விண்ணப்பதாரருக்கு திருப்பி அனுப்பும்.
படி 6: விண்ணப்பதாரர் கடனைப் பெறுதல்.
காலக்கோடு
1.சுயத்தொழில் கடனுக்கான விண்ணப்பம்
செயல்முறை காலக்கோடு
2 வாரங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம - மு.ப 9.00 – பி.ப 2.30 வரை
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தல்
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் - மு.ப 9.00 – பி.ப 2.30 வரை
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
குறிப்பு:
பகுதியைப் பொறுத்து சில சமுர்த்தி வங்கியின் மூடும் நாட்கள் மாற்றப்படும்: எ.கா. : சமுர்த்தி வங்கிகள் வார நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும்.
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
கடன் தொகையைப் பொறுத்து 1 மற்றும் 5 ஆண்டிற்குள் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படும்.
விவசாயத்திற்கான கடன்
செயல்முறை காலக்கோடு
2 வாரங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9.00 – பி.ப 2.30 வரை
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள
விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்தல்
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9.00 – பி.ப 2.30 வரை
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
குறிப்பு:
பகுதியைப் பொறுத்து சில சமுர்த்தி வங்கியின் மூடும் நாட்கள் மாற்றப்படும்: எ.கா. : சமுர்த்தி வங்கிகள் வார நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும்.
ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு
6 மாதக் காலத்திற்குள் கடன் தொகை திருப்பி செலுத்தப்படும்.
நுகர்வோருக்கானக் கடன்
செயல்முறை காலக்கோடு
1 நாள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9.00 – பி.ப 2.30 வரை
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்தல்
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9.00 – பி.ப 2.30 வரை
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
குறிப்பு:
பகுதியைப் பொறுத்து சில சமுர்த்தி வங்கியின் மூடும் நாட்கள் மாற்றப்படும்: எ.கா. : சமுர்த்தி வங்கிகள் வார நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும்.
குறிப்பு:
பகுதியைப் பொறுத்து சில சமுர்த்தி வங்கியின் மூடும் நாட்கள் மாற்றப்படும்: எ.கா. : சமுர்த்தி வங்கிகள் வார நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும்.
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
ஒரு வருடக் காலத்திற்குள் கடன் தொகை திருப்பி செலுத்தப்படும்.
மீன்வளர்ப்புக்கான கடன்
விபரங்கள் கொடுக்கப்படவில்லை.
விபத்திற்கானக் கடன்
விபரங்கள் கொடுக்கப்படவில்லை.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
எல்லா கடன்களுக்குமானது
செலவினம்
கடன்தொகை ரூ.5000 ஆக இருந்தால் – கடனில் 5% வைப்புத்தொகையாக சமுர்த்தி
பாதுகாப்பு நிதியில் வைக்கப்படும்
ரூ.5000 மற்றும் ரூ.10,000க்கு இடைப்பட்ட கடன் தொகையாக இருந்தால் – கடனில்
4% வைப்புத் தொகையாக சமுர்த்தி பாதுகாப்பு நிதியில் வைக்கப்படும்.
ரூ.10,000 மற்றும் ரூ.100,000க்கு இடைப்பட்ட கடன் தொகையாக இருந்தால் – கடனில்
3% வைப்புத் தொகையாக சமுர்த்தி பாதுகாப்பு நிதியில் வைக்கப்படும்.
கட்டணம்
ஒரு ஆண்டின் கடனுக்கான வட்டித்தொகை 18%.
அபராதங்கள்
விண்ணப்பதாரர் குறிப்பிட்டக் காலத்திற்குள் மாதத் தவணையை செலுத்த தவறினால் அவன் அல்லது அவள் மாத தவணையிலிருந்து 5 % அபராதமாக செலுத்த வேண்டும்.
1. சுயத்தொழில் கடனுக்கான விண்ணப்பம்
ரூ.10,000க்கு மேல் கடன் தொகையைப் பெற விண்ணப்பதாரர் வியாபார மதிப்பீட்டு படிவத்தை முன் வைக்க வேண்டும் மற்றும் ரூ.75,000 முதல் ரூ1,00,000 த்திற்கான கடன் தொகையைப் பெற நிலப்பத்திரம் அல்லது வாகனப் புத்தகம் மற்றும் இதர ஆவணங்களையும் விண்ணப்பதாரர் முன் வைக்க வேண்டும்.
2. விவசாயத்திற்கானக் கடன்

3. நுகர்வோருக்கானக் கடன்
சமுர்த்தி வங்கியிடம் விரும்பி வாங்கக்கூடிய விலைப்பட்டியலை விண்ணப்பதாரர் அவன் /அவள் ஒப்படைக்க வேண்டும்.
4. மீன்வளர்ப்புக்கான கடன்
விபரங்கள் கொடுக்கப்படவில்லை.
5. விபத்திற்கானக் கடன்
விபரங்கள் கொடுக்கப்படவில்லை.
சேவைகளின் பொறுப்புக் குழு
நபரின் பதவி
நபரின் பெயர்
பிரிவின் பெயர்
சமுர்த்தி மேலாளர்
-
சமுர்த்தி வங்கி
சமுர்த்தி சேவகர்
-
சமுர்த்தி வங்கி
எழுத்து விளைஞர்
-
சமுர்த்தி வங்கி
சிறப்பு வகையறைகள்
கடன் பெற்ற விண்ணப்பதாரர் நோய்வாய் பட்டு கடனை திருப்பி அடைக்க முடியாத நிலையில் இருந்தால் கடன் மீதான வட்டி சமுர்த்தியால் விதிக்கப்படமாட்டாது.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.