முத்திரைகள் ரூ.140/-, 250/-, 350/-, 400/-, 600/-, 1000/- ல் வழங்கப்படுகிறது
ரூ.140 – கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.100
காப்பீட்டிற்காக ரூ.40
ரூ.250 – கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.210
காப்பீட்டிற்காக ரூ.30
நிவாசா குலுக்குச் சீட்டிற்காக ரூ.10
ரூ.350 – கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.340
நிவாசா குலுக்குச் சீட்டிற்காக ரூ.10
ரூ.600 – ரொக்கம் ரூ.300
கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.160
கட்டாய சேமிப்பிற்காக ரூ.100
காப்பீட்டிற்காக ரூ.30
நிவாசா குலுக்குச் சீட்டிற்காக ரூ.10
ரூ.1000 – ரொக்கம் ரூ.400
கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.360
கட்டாய சேமிப்பிற்காக ரூ.200
காப்பீட்டிற்காக ரூ.30
நிவாசா குலுக்குச் சீட்டிற்காக ரூ.10
தகுதி
- விண்ணப்பதாரருடைய மாத வருமானம் ரூ1,000.00 க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
- குடும்ப உறுப்பினர்கள் 3க்கும் மேல் இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
விதவை / மனைவியை இழந்தவர், அனாதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
சமர்ப்பிக்கும் வழிமுறைகள்
விண்ணப்பதாரர் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள்
முறையான விண்ணப்பப்படிவங்கள் இல்லை.
படிப்படியான வழிமுறை
படி 1: விண்ணப்பதாரர் சமுர்த்தி வளர்ச்சி அலுவலரிடம் வேண்டுதல்.
படி 2: சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் விண்ணப்பதாரரின் வேண்டுகோளை விசாரித்தல்.
படி 3: முத்திரைகள் வழங்குவதற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை ஒப்புதல் பெறுவதற்க்காக சமுர்த்தி மேலாளரிடம் அனுப்புதல்.
படி 4: சமுர்த்தி மேலாளரால் பரிந்துரைக்கபட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை ஒப்புதல் பெறுவதற்க்காக கோட்டம் செயலகத்திடம் அனுப்புதல்.
படி 5: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு கோட்டம் செயலகம் முத்திரைகள் வழங்குதல்.
குறிப்பு:
சமுர்த்தி மேலாளர் அல்லது கோட்ட செயலகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் தகுதியற்றவர் ஆவார்.
காலக்கோடு
செயல்முறை காலம்
ஆறு மாதங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நேரங்களில்
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
விடுமுறை நாட்கள் – பொது விடுமுறை நாட்கள்
சேவைத் தொடர்பான செலவிணங்கள்
செலவினம் ஏதுமில்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
பொருந்தாது
சேவைகளின் பொறுப்புக் குழு
பதவி |
பெயர் |
பிரிவு |
சமூர்த்தி அபிவிருத்தி மேலாளர் |
- |
சமூர்த்தி வங்கி |
பிரிவு செயலாளர் |
- |
கோட்டகம் செயலகம் |
சிறப்பு வகையறைகள்
சிறப்பு வகையறைகள் இல்லை
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை சமுர்த்தி அதிகாரச் சபை
4வது தளம், செத்சிரிபாய பத்தரமுல்ல. திரு.H. K. கீதசேனா தொலைபேசி:+94-11 - 2693993, +94-11-2673886 தொலைநகல் இலக்கங்கள்:+94-11 - 2691017, +94-11-2673775 மின்னஞ்சல்:samurdhicom@gmail.com , thilankaanuradha@gmail.com இணையத்தளம்: www.samurdhidept.gov.lk
|