நுகர்வோரின் உரிமை மற்றும் பொறுப்புகளை அவர்கள் தெரிந்துக் கொள்வதற்காக குழுமம் இச்சேவையை வழங்குகிறது.
இச்சேவையின் கீழ் கொடுக்கபட்டுள்ள நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றது.
• நுகர்வோர் அமைப்புகள் அமைப்பதற்காக நுகர்வோரை தூண்டுதல்
• பாடசாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
• பாடசாலைகளுக்கி;டையில், ஓவியம், கட்டுரை மற்றும் நாடக போட்டிகள்
• அனைத்து தீவுகளுக்கிடையிலான பொது அறிவு கேள்வி போட்டிகள்.
• நுகர்வோர் சடங்கோடு கூடிய நிகழ்ச்சிகள்
• விளம்பரங்கள்
தகுதி
ஆர்வமுடைய எந்த ஒரு தனி நுகர்வோரோ நுகர்வோர்கள் ஒன்று கூடியோ வேண்டுதலை குழுமத்திற்கு தெரிவிக்கலாம்.
சமர்ப்பிக்கும் முறைகள்
நுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவங்கள்
தொலைபேசி/சந்திப்பு/கடிதம் மூலமாக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வேண்டுகோள்.
படிப்படியான வழிமுறைகள்
படி 1:
நுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் விண்ணப்பதாரர் வேண்டுகோள்விடுத்தல்.
படி 2:
விண்ணப்பதாரருக்கு தேவைப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வகைகளை கண்டறிய குழுமம் கலந்தாலோசிக்கும்.
படி 3:
குழுமம் நிகழ்ச்சி நடக்குமிடம், திகதி, நேரம் மற்றும் தலைப்பு ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும்.
படி 4:
குழுமம், குழுவை நிர்ணயத்தல் மற்றும் நிகழ்ச்சியை அட்டவணையிடும்.
படி 5:
குழுமம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்.
படி 6:
நுகர்வோர் அமைப்பு நிறுவுதல் வளர்சிக்கு ஊக்கமளித்தல்.
காலக் கோடு
செயல்முறை காலக்கோடு:
விண்ணப்பதாரர்கள் ஒப்பந்தமிடப்பட்ட நிகழ்ச்சி நடக்கவிருக்கும் திகதியிலிருந்து 2 வாரங்களுக்கு முன்னதாகவே வேண்டுகோளை அனுப்ப வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:
வேலை நாட்கள்: திங்கட்கிழமை – புதன்கிழமை
கரூமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்: மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்.
ஏற்றுக் கொள்ள கூடிய காலக்கோடு:
குழுமம் வழங்கிய இந்தச் சேவையானது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து முடிந்து மற்றும் சேவையானது முடியும் வரை செல்லுபடியாகும்.
சேவை தொடர்பான செலவீனங்கள்
செலவீனம்:
குழுமம் செலவீனத்தை நிர்ணயிக்கும்.
கட்டணம்: இந்த சேவையில் கட்டணம் ஏதும் உள்ளடங்கவில்லை.
அபராதம்:
இந்த சேவையை வழங்குவதற்கு அபராதம் ஏதுமில்லை.
இதரக் கட்டணம்:
இந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை.
இணைப்பு ஆவணங்கள்
இந்த சேவையை பெறுவதற்கு தேவையான இணைப்பு ஆவணங்கள் ஏதுமில்லை.
அமைப்பு பற்றிய தகவல்
நுகர்வோர் நலக் குழுமம்
1 மற்றும் 2 வது மாடி,
ச.தொ.ச. செயலகக் கட்டிடம்,
இல : 27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு 02.