நீங்கள் ஏழ்மையான நபராக இருந்தால் உங்களுக்கு அரசாங்க நிலத்தை எந்தவிதக் கட்டணமும் இன்றி பெற வேண்டுமானால், அந்தப் பகுதி கோட்ட செயலர் அரசாங்க நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன என்று அறிவிக்கும் போது விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
தகுதிகள்
•விண்ணப்பதாரர்கள் இலங்கையினராக இருக்க வேண்டும்.
•விண்ணப்பதாரர் திருமணம் ஆனவராக இருக்க வேண்டும்.
•குடும்பத்தின் மாத நிகரவருமானம் ரூ. 2500க்கு குறைவாக இருக்க வேண்டும்.
•விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
•விண்ணப்பதாரர் சொந்தமாக நிலங்கள் வைத்திருக்கக் கூடாது.
•குறிப்பிட்ட பிரிவில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வசத்திருக்க வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பப்படிவகளைப் பெறுதல்
• விண்ணப்பதாரர் கோட்ட செயலகத்தில் இருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது கோட்ட செயலகத்திலிருந்து வெளியிடப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்களை வைத்து தானே தயார் செய்துக் கொள்ளலாம்.
• விதிமுறைகளின் படி விண்ணப்பப்படிவம் பூர்த்திச் செய்யப்பட வேண்டும்
விண்ணப்பப்படிவத்தை ஒப்படைப்பது
• பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை
சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் சமர்பிக்க வேண்டும்.
வேலை நாட்கள்
திங்கட்கிழமை &
புதன்கிழமை
வேலை நேரம்
மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை.
குறிப்பு
கோட்ட செயலர் அரசாங்க நிலங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்று அறிவிப்பு வெளியிடும் போது விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டும்.
படிப்படியான வழிமுறைகள் (அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்)
படி 1: கோட்ட செயலர் நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன என்று அறிவித்தல் பொது இடத்தில் (பள்ளிகள், தபால் அலுவலகங்கள்) இந்த அறிவிப்புகளை வெளியிடும்போது நேர்முகத் தேர்வுக்காண நாள் வெளியிடப்படும் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவமும் வழங்கப்படும்.
படி 2: விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திலிருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கோட்டச் செயலகத்திலிருந்து வெளியிடப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்களை வைத்துத் தானேத் தயார் செய்துக் கொள்ளலாம்.
படி 3: விண்ணப்பதாரர் கோட்ட செயலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்;.
படி 4: கோட்ட செயலகம் நில கச்சேரியை கூட்டி விண்ணப்பதாரர்களை தேர்ந்கெடுக்கும்.
படி 5: கோட்ட செயலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலைப் பொது இடங்களில் வெளியிடும்;.
படி 6: கோட்ட செயலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிலவளர்ச்சி ஆணையை வழங்கும்.
குறிப்பு 1: அரசாங்கத்தால்; இலவசமாக வழங்கப்படும் நிலத்தை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், சம்மந்தப்பட்ட கோட்ட செயலகம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் மற்றும் எதிர்ப்பு கோரியவரை நேரில் அழைத்து விசாரிக்கும். கோட்ட செயலகம் திருப்தி அடையவில்லையென்றால் விண்ணப்பதாரர் தகுதியை இழப்பார்.
குறிப்பு 2: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலின் படி ஆணையின் அடிப்படையில் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரருக்கு நிலபகிர்மானம் திருப்தி தரவில்லையென்றால், பின்பு நிலப்பகிர்வு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.
காலக்கோடு
செயல்முறைக் காலக்கோடு
3 மாதங்களுக்குள்
எதிர்ப்பு தெரிவித்த 2 வாரங்களுக்குள் நேர்கானல் கையாளப்படும்;.
சமர்ப்பித்தலுக்கான காலக்கோடு
விண்ணப்பங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு 30 நாட்களுக்குள் கோட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
செல்லுபடியாகும் காலக்கோடு
நில வளர்ச்சி ஆணையின் படி பெறப்பட்ட நிலங்கள் ஒரு வருடத்திற்குள் அபிவிருத்தியடைய செய்ய வேண்டும்.
வேலை நேரம் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்):
மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை வரை
கிராம நல சேவகர் அலுவலகம்: மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி
திங்கட்கிழமை
மு.ப 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை வரை