-தகுதி
இடத்தை தேர்வு செய்வதற்கான கொள்கை தகுதி வரையறை
மதுபான விற்பனைக்கான இடம் குறைந்தபட்சம் 250 சதுர அடியில் இருக்க வேண்டும். மதுபானம் விற்பனை செய்யும் அதே இடத்திலேயே உபயோகப்படுத்தினால் அந்த இடமானது குறைந்தபட்சம் 500 சதுர அடியில் இருக்க வேண்டும்.
குறிப்பு: பீர், ஆலி ஸ்டுட் மற்றும் வைன் போன்ற சில்லறை விற்பனை உரிமத்திற்கு இந்த தேவைகள் பொருந்தாது.
மதுபான விற்பனைக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள்
கட்டிடங்களுக்கு வெளியே மதுபானம் பயன்படுத்துவதற்கு:- கட்டிடமானது பாடசாலைகள் மற்றும் சமய வழிபாட்டு தளங்களிலிருந்து 100
மீட்டர் அளவுகோலுக்கு தொலைவில் இருக்க வேண்டும் (காகங்கள் ஒரு எல்லை கோட்டிலிருந்து மற்றொரு எல்லைகோட்டிற்கு பறப்பது போன்று)
கட்டிடங்களுக்கு உள்ளே மதுபானம் பயன்படுத்துவதற்கு:- பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தளங்களிலிருந்து 500 மீட்டர் அளவுகோலுக்கு தொலைவில் இருக்க வேண்டும் (காகங்கள் ஒரு எல்லை கோட்டிலிருந்து மற்றொரு எல்லைகோட்டிற்கு பறப்பது போன்று)
குறிப்பு
கட்டிடத்திற்கான உரிமம் தொடர்ந்து பத்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக இருந்தால் மேலே குறிபிடபட்டுள்ள தூரவகையை கொண்டிருக்காது. கட்டிடமானது மதுபான விற்பனைக்கு உகந்ததாகவும் பொதுமக்களிடமிருந்;து எந்தவித ஆட்சேபனை இல்லாதிருப்பின்; விண்ணப்பங்கள் கலால் திணைக்களத்தின் பொது ஆணையாளரால் உரிமம் வழங்குவதற்கு பரிசீலிக்கப்பபடும்.;
கட்டிடத்திற்கு உரிமம் வழங்கப்பட்ட பின் சமய வழிபாட்டு தளங்கள் அல்லது பாடசாலைகள் அமைக்கபடடிருப்பதாக ; கலால் திணைக்கள பொது ஆணையாளர் திருப்தியடைந்தால்இஇச்சுழலில மேலே கூறப்பட்டுள்ள வரையறைகள் பொருந்தாது.
மேலே சொன்ன வரையறைகள் கீழ்காண்பவைகளுக்கு பொருந்தாது
சுற்றுலா வாரியத்தால் உரிமம் வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்கும் விடுதிகள்
கழகஙகள்(club) அல்லது மதுபானங்கள.; விற்பனை செயவதை வியாபார நோக்கமாக கொண்டிருக்காத பிற வாணிபத்தலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம்
சம்பந்தபட்ட அதிகாரிகள் கருத்தின்படி மேலே உள்ள வரையறைகள் கலால் திணைக்கான பொது ஆணையாளரால் வரையறுக்கப்படுகின்றன.
விண்ணப்பதாரருக்கான தகுதி காரணிகள் குறித்து(இரண்டாவது முறை விண்ணப்பம் பெறுதல்)
வேறு தகுதியான விண்ணப்பதாரர் அந்த மாவட்டத்திற்குள் இல்லை என்று தெரிந்தால் மட்டுமே ஏற்கனவே உரிமம் வழங்கபட்டுள்ளன விண்ணப்பதாரருக்கு இரண்டாவது முறையாக உரிமம் வழங்குவதற்கு முடிவு செய்யப்படும் .
குறிப்பு: கலால் திணைக்கள பொது ஆணையாளரின் கருத்துப்படி விண்ணப்பதாரர் வியாபாரம் செய்வதற்கான பிரத்யேக உரிமை (monopoly) அல்லது மதுபான வகைiளை விநியோகம் செய்தல் அல்லது தங்குதடையின்றி மதுபான வகைகளை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இரண்டுக்கு மேற்பட்ட உரிமங்களை குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் வைத்திருந்தால் அந்த விண்ணப்பதாரருக்கு உரிமம் வழங்காட்டார்
குறிப்பு : தகுதியிழப்பதற்கான காரணி
சம்பந்தப்பட்ட கட்டிடம் பாடசாலைகள்,மற்றும் சமயவழிபாட்டுத் தளங்கள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள துரத்தில் வன்முறைகள் நிகழ்ந்ததென்று புகார்கள் ; பெறப்ட்டிருப்பின் அரசு கணக்கீட்டு கண்காணிப்பாளரார்; அறிக்கையின் படி உண்மையான துரம் பற்றி விளக்கமளிக்க வேண்டும். மதிப்பீட்;டிற்காக ஆகும. செலவினை உரிமம் வைத்திருப்பவரே ஏற்றுக்கொள்ள வேண்டும.; மதிப்பீட்;டின் முடிவில் துரம் குறித்த விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரிய வந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். .
கலால் திணைக்கள பொது ஆணையாளர் அமைப்புகளின் உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ உரிமம் கொடுப்பதற்கு முன்போ அல்லது கொடுத்தபின்போ ஏதேனும் மறுப்புகளை பெறலாம். ஏனென்றால் ஏதேனும் சட்டமீறல்களோ அல்லது உத்தரவு மீறல்களோஇ கலால் திணைக்களத்தால் வழங்கப்பட்ட உரிமத்தை நீட்டிப்பதற்காக ஆணைஇ வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளை மீறினாலோ கலால் திணைக்கள பொது ஆணையாளர் மூலமாக விண்ணப்பதாரருக்கு அல்லது உரிமையாளருக்கு தகவல்கள் தெரிவக்கப்ப்டும். கலால் திணைக்கள பொது ஆணையாளர் விசாரணையை முடித்த பிறகு அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பார்;.
சமர்பிக்கும் முறைகள்
விண்ணப்படிவத்தைப் பெறுதல்
விண்ணப்பதாரர், தீவை சுற்றி முழுவதுமாக உள்ள கலால் வரி தலைமை அலுவலகம் அல்லது ஏதேனும் ஒரு துணை கலால் வரி ஆணையாளர் அலுவலகத்திடம் சம்மந்தப்பட்ட விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவம் பெறலாம்.
விண்ணப்பங்கள் அனைத்து முறைகளிலும் மற்றும் அனைத்து தேவையான ஆவணங்களையும் முழுமைபடுத்தியிருக்க வேண்டும்
தேவையான இணைப்பு ஆவணங்கள்
உள்ளுர் குழுவினால் சான்றழிக்கப்பட்ட சம்மந்தப்பட்ட கட்டிடத்தின் தரைதள வரைபடத்தின் பிரதி;.
உரிமையை நிருபிக்கும் உண்மையான பத்திரம் மற்றும் அதற்குரிய சான்றழிக்கப்பட்ட நகல்.
குறிப்பு :
விண்ணப்பதாரருக்கு இடம் உரிமையில்லை எனில், அந்த இடத்தின்; உரிமையாளரிடமிருந்து வியாபாரம் செயவதற்கான ஒப்புதல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆந்த ஒப்புதல ஆவண எழுத்துப்(Notary Public) பதிவாளரால் சான்றழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஓப்புதல் பெற்ற இடம் அடமானத்தில் இருந்தால், அந்த இடம் அடமானத்தில் இருக்கிறது என்பதை உறுதியளிப்பதற்கு சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும.
கலால் வரி நிலையத்தின் பொறுப்பாளர் மற்றும் கலால் வரி துணை ஆணையாளரினால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையையும் சேர்க்க வேண்டும்.
விண்ணப்பதாரர் கடந்த 5 வருடகாலத்தில் பீனல் தொகுப்பின் கீழ் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் அல்லது வேறு எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை எனவும் வாக்குமூலம் மூலமாக உறுதியளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கட்டிடம, அருகிலுள்ள சமயவழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இடையேயுள்ள தொலைவை குறித்து உரிமம்பெறப்பட்ட நிலமதிப்பீட்டாளரால் வழங்கப்பட்ட .மதிப்பீட்டுத் திட்டம்
நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்காக ஆவண எழுத்துப் பதிவாளரால் சான்றழிக்கப்பட்ட வியாபார பதிவுச்சான்றிதழ் மற்றும் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் சான்றிதழ்களின்(உநசவகைiஉயவந ழக ஐnஉழசிழசயவழைn) உண்மை படிவம்.
தொகைக்கான ஆதாரம் (விண்ணப்ப கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது)
சிறப்பு அங்காடிகள், மளிகை கடைகள் போன்ற வாணிப கடைகளுக்கான மதுபான சில்லரை வியாபாரத்திற்கான உரிமம் வழங்குதல் குறித்து: விண்ணப்பதாரரின் குடும்ப தொழில் / நிறுவனத்தின் கடந்த ஆண்டிற்கான விற்பனை 72 மில்லியன்களுக்கு மேல் இருக்கிறது என்ற ஆதாரம் அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது உள்நாட்டு வருவாய் திணைக்களத்திடமிருந்தோ பெறப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கழக உரிமத்திற்கான விண்ணப்பம் பெறுவதற்கு மேற்கூரிய அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைஇ ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
கழகச் சட்டம், 17 1975இன் கீழ் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்.
விண்ணப்பதிகதிக்கு முன்னதாக தொடர்ந்து (5) வருடங்கள் க்லப் இருப்பதற்கான நிருபிக்கப்பட்ட ஆவணங்கள்.(இந்த ஒழுங்குமுறை தற்போது உரிமம் வைத்திருப்பவருக்கு பொருந்தாது.
வங்கி கணக்கின் செயல்பாட்டிற்கான ஆதாரம்.
விளையாட்டுத்துறை அமைச்சர் அல்லது பொது நலத்துறை அமைச்சரிடமிருந்து பெறப்பட்ட பதிவு சான்றிதழ்.
விண்ணப்பதிகதிக்கு முன்னதாகச் செலுத்திய வருமானவரி, மதிப்புக்கூட்ட வரி(பொருந்தும் இடங்களில்) மற்றும் மாதப்பணப்பட்டுவாட உடன் சேர்ந்த காலாண்டுகளுக்கு செலுத்த வேண்டிய ஏனைய வரிகளின் ஆதாரங்கள்.
புதிய விண்ணப்பதாரர் பீர், அல், ஸ்டௌட் மற்றும் ஒயின்ஸ் விற்பணைக்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியினைப b , c , d ,e , j, g மற்றும் j பார்த்து அதற்கு தேவையான ஆவணங்களையும் மற்றும் அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவங்களை ஒப்படைத்தல்
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் துணை கலால் வரி ஆணையாளர் முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் மாகாணத்தின் துணை கலால் வரி ஆணையாளர் அலுவலகத்தில் பதிவு உறையுடன் முன்மொழிய வேண்டும்.
விண்ணப்பதாரர், தலைமை கலால் வரி ஆணையாளர் / துணை கலால் வரி ஆணையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறும் பொழுது அவன்/அவள் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் அனுமதி பெறுவதற்காக ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு:
விண்ணப்பங்கள் பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
புதிய மதுபான அனுமதி பெறுதல் (கலால் வரி தலைமை அலுவலகம் அல்லது துணை கலால் வரி ஆணையாளர் அலுவலகத்திடமிருந்து விண்ணப்பத்தைப் பெற வேண்டும்)
படிப்படியான வழிமுறைகள் (மதுபானத்திற்கான அனுமதி வழங்குதல்)
படி 1: விண்ணப்பதாரர் கலால் வரி தலைமை அலுவலகம் அல்லது தீவைச்சார்ந்த பகுதிகளில் ஏதாவது துணை கலால் வரி ஆணையாளர் அலுவலகத்திடம் சம்பறந்தப்பட்ட விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவம் பெறலாம்.
படி 2: பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் துணை கலால் வரி ஆணையாளர் முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் மாகாணத்தின் துணை கலால் வரி ஆணையாளர் அலுவலகத்தில் பதிவு உறையுடன் அனுப்பட வேண்டும்
குறிப்பு விண்ணப்பம், விண்ணப்பங்களில் குறிப்பிட்ட அனைத்து தேவையான ஆவணங்களையும் முழமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பம் பெறபட்டுவிட்டால், கலால் வரி திணைக்களம் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் களத்தை நேரடியாக சென்று பார்வையிடுமாறு; கிராம நிலதாரி சான்றிதழுடன் அறிக்கையை அனுப்பி வைக்கும்;.
படி 3: கோட்ட செயலகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தலைமை கலால் வரி ஆணையாளர் / மாகாணத்தின் துணை கலால் வரி ஆணையாளர் அவர்களின் முடிவை பதிவு தபால் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைப்பர்.
படி 4: விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திற்கு சென்று தலைமை கலால் வரி ஆணையாளர் / மாகாணத்தின் துணை கலால் வரி ஆணையாளரிடம் இருந்து பெற்ற ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
படி 5: விண்ணப்பதாரா தொகையை செலுத்திய பிறகு அதற்கு சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் ஒப்புதல் கடிதத்தை சரிபார்த்து அனுமதி வழங்கும்.
குறிப்பு 1: பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் அல்லது தேவையான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் இல்லாத விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் அல்லது வழிக்காடடி; விபரங்கள், நிபந்தனைகளை உறுதி செய்யாத ; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மதுபான உரிமை வழங்குவதற்கான விண்ணப்பத்தை கலால் வரி தலைமை ஆணையாளர்; நிராகாத்தார் எனில், அவர் தன் முடிவை பதிவு தபால் மூலம் விண்ணப்பம் நிராகரிப்பட்டதற்கான காரணங்களையும் மற்றும் உரிமம் பெறுவதற்கு மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளகூடிய .தகவல்களையும் காண்பிக்க வேண்டும் என்று விண்ண்ப்பதாரருக்கு தெரிவித்தல்.
விண்ணப்பதாரர் அவருடைய விண்ணப்பம் மறுக்கப்படக்கூடாது என்பதற்கான காரணக்கடிதத்தையும் மற்றும் இணைப்பு ஆவணங்களையும் பதிவு தபால் மூலம் கலால் வரி தலைமை ஆணையாளருக்கு அனுபப வேண்டும்.
விண்ணப்பதாரரின் பதிலை அடிப்படையாக கொண்டு கலால் வரி தலைமை ஆணையாளர் தன் முடிவை பதிவு தபால் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுபபுவார்.
குறிப்பு 2: மதுபான அனுமதியை புதுப்பிப்பதற்கு கலால் வரி திணைக்களம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
காலக்கோடு செயல்முறை காலக்கோடு
சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் 1 நாளுக்குள் அனுமதி வழங்கும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
கோட்ட செயலகத்தின் ஏதாவது ஒரு வேலை நாள்; / வேலை நேரம்.
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கோடு
ஒரு வருடம்
குறிப்பு: உரிமம் ஒவ்வொரு வருடமும்; புதுப்பிக்கப்பட வேண்டும்.
வேலை நேரம் / நாட்கள் கோட்ட செயலக அலுவலகம்( நிறுவுதல் பிரிவு): மு.ப 9.00 மணி – பி.ப 4.30 மணி
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள
உரிமத்தின் தன்மை அல்லது விளக்கம்
உரிம கட்டணம் ரூபா.
பாதுகாப்பு முன்பணம் ரூபா.
மதுபானத்திற்கான மொத்த வியாபார உரிமம்
250,000
50,000
மதுபானத்திற்கான சில்லறை வியாபார உரிமம்
நகராட்சி பகுதி
நகர சபை.பகுதி
மற்ற பகுதிகள்
150,000
100,000
75,000
25,000
விண்ணப்பதாரர் நடத்தும் சிறபபு அங்காடி, மளிகை கடைகள்நிறுவனம்/தொழிலின் ஆண்டு விற்பனை ரூபா 72 மில்லியனுக்கு மேல் இருந்தால்உரிமம் வழங்கப்படும.