The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் அடகுகடைத் தரகர் தொழிலுக்கு உரிமம் வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


அடகுகடைத் தரகர் தொழிலுக்கு உரிமம் வழங்குதல்

PDF Print Email

அடகுகடைத் தரகர் தொழிலுக்கு உரிமம் வழங்குதல்

தகுதி
o    விண்ணப்பதாரர்; இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும்.
o    விண்ணப்பதாரர் ஏதாவது தவறு செய்து அதற்கு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவராகவோ அல்லது சட்டத்திற்கு புரம்பாக நடந்து கொள்பவராக இருத்தல் கூடாது.
குறிப்பு: அடகுபிடிப்பதற்கான உரிமம் இல்லாத எந்த ஒரு நபரினாலும் இத்தொழிலை செய்ய முடியாது.
குறிப்பு: தகுதியற்ற காரணிகள்

•    பின் வரும் நபர்கள் அடகு தொழில் செய்ய தடை செய்யப்பட்டவர்கள்
o    இலங்கை குடிமகன் அல்லாத நபர் அல்லது
o    வெளிநாட்டு நிறுவனம் அல்லது
o    வெளிநாட்டு அமைப்பு

•    எந்த நபராவது அடகு தொழிலுக்கான உரிமம் வைத்திருக்காவிட்டால்:

-    உரிமத்திற்காக விண்ணப்பித்த நாளிலிருந்து ஐந்து வருடத்திற்கு முன்னால் எந்த நேரத்திலாவது அவர் தண்டனைக்கு உட்பட்டவராக இருந்தால்.
-    குற்றம் செய்ததற்காக அரசாங்க பெயர் அறிக்கையில் இவருடைய பெயர் இருந்தால்
-    நபர் ஆண்டு கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காமல் இருத்தல்

•    அடகு தொழில் செயவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் அந்த நபருக்கு உரிமம் வழங்கப்படாது.

சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்ப படிவம் பெறுதல்
- விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட கோட்ட
 செயலகத்திலிருந்து விண்ணப்ப படிவம் பெற
   வேண்டும்.
- விண்ணக்கம், விண்ணப்பங்களில் குறிப்பிட்ட  அனைத்து தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்
-குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பேற்றுள்ள பொலிஸ் கண்காணிப்பாளரிடமிருந்து பெற்ற பொலிஸ் அறிக்கை.
-கிராம சேவகர் அறிக்கை
விண்ணப்பதாரால் வழங்கப்பட்ட பணம் தொடர்பான விளக்கங்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு அறிக்கை ஆதாரமாக  இருக்க வேண்டும்

விண்ணப்ப படிவத்தை ஒப்படைத்தல்
-    விண்ணப்பதாரர் தொகையை செலுத்திய பிறகு அதற்கு சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு:
-    பாதுகாப்பிற்காக தொகையானது தேசிய சேமிப்பு வங்கி கணக்கில் முன்பணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்ப படிவத்தின் இலக்கம் / பெயர் விரிவாக்கம்
அடகு கடைக்கு உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம்   

அடகு கடையின் உரிமம் பெறுவதற்கு

டிப்படியான வழிமுறைகள் (அடகு கடைக்கு உரிமம் வழங்குவதற்கு)

படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை தொடர்புடைய கோட்ட செயலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
படி 2: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை; இணை ஆவணங்கள் மற்றும் தொடர்பான தொகைகளுடன் கோட்ட செயலகத்தில் தபால் மூலம் ஒப்படைக்க வேண்டும்.
படி 3: கோட்ட செயலாளர் பகுதியை பார்வையிடுதல் மற்றும் விண்ணப்பத்தை அங்கீகரித்தல்.
படி 4: கோட்ட செயலாளர் அடகு கடைக்கான உரிமத்தை அங்கீகாரம் செய்தல்.
குறிப்பு 1:
தேவையான ஆவணங்கள் இல்லையெனில், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரருக்கு தகுதியிழந்ததற்கான காரணத்தை தெரியப்படுத்தப்படும்.
   

குறிப்பு 2:
ஒவ்வொரு வருடமும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். (உரிமையாளர் முந்தைய காலத்தில் இதே மாதிரி விணணப்பங்கள் ஏதாவது வைத்திருந்தால் மற்றும் இவரது வியாபாரம் அடகு கடை வைத்திருப்பது தொடர்பாக இருந்தால் மேலும் இவர் சட்டகட்டுபாட்டிற்கு மற்;றும் நடைமுறைக்கு முற்றிலும் மாறான முன்னேற்பாடான நோக்கங்கள மற்றும் செயல்களை செய்யும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் என்று கோட்ட செயலகம் கருதினால் அவரது உரிமத்தை புதுப்பிப்தற்கு மறுப்பு தெரிவிக்கலாம்)

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு
உரிமம் வழங்குதல்                     : ஒரு மாதத்திற்குள்
குறிப்பு : விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மறுத்தற்கான காரணத்தை தொடர்புடைய கோட்ட செயலகம் விண்ணப்பதராருக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

சமர்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நாட்கள் /கோட்ட செயலக நேரங்களில்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
ஒரு வருடம்

குறிப்பு: ஒவ்வொரு வருடமும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் (புதுப்பிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால்இ அது தொடர்பாக கோட்ட செயலகம் 30 நாட்களுக்குள் மறுத்ததற்கான காரணத்தை விண்;ணப்பதாரருக்கு தெரிவிக்கவும்)

வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு):    மு.ப. 9.00 மணி முதல் – பி.ப. 4.30 மணி வரை
திங்கள் மற்றும் புதன்

சேவைத் தொடர்பான கட்டணங்கள்
உரிம கட்டணம் – ரூ.25000
உரிமத்தை புதுப்பிக்க கட்டணம் – ரூ.1000
தேசிய சேமிப்பு வங்கியின் பாதுகாப்பு வைப்பு தொகை – ரூ. 100,000. 

தேவையான இணைப்பு ஆவணங்கள்
•    அந்த பகுதியில் உள்ள பொலிஸ் கண்காணிப்பாளரிடமிருந்கு பொலிஸ் அறிக்கை.
•    கிராம சேவகரின் அறிக்கை
•    விண்ணப்பதாரரின் பாதுகாப்பு தொகையின் அறிக்கையை சாடசியாக தேசிய சேமிப்பு வங்கி கொடுக்க வேண்டும்.
குறிப்பு: பாதுகாப்பு வைப்பு தொகையாக தேசிய சேமிப்பு வங்கி கணக்கில் இருக்க வேண்டும். 


அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.


Mrs.M.A.S.Kanchana Gunawardhana
தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

தொடர்பான சேவைகள்

காணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-24 13:42:20
ICTA Awards

தொடர்பு

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-12-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 185