The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிறப்பு புதிய பிறப்பு சான்றிதழை வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


புதிய பிறப்பு சான்றிதழை வழங்குதல்

PDF Print Email

புதிய பிறப்பு சான்றிதழை வழங்குதல்

தகுதி
•    கோட்ட செயலக எல்லைக்குள் இலங்கையில் பிறந்தவர்இ பிறப்பு சான்றிதழை சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திலிருந்து பெறுவதற்கு தகுதியானவர் ஆவர்.

குறிப்பு:
•    இந்த தகவல் குழந்தையின் தந்தை அல்லது தாய் முலம் கொடுக்கப் பட வேண்டும்.
•    குழந்தையின் பெற்றோர்கள் இறந்திருந்தால் அல்லது நோய் வாய்பட்டிருந்தால், மற்ற காப்பாளர் கலந்து கொள்ளலாம்.
தகவல் தெரிவிக்கப்படவில்லையெனில் அது தண்டணைக்குரிய குற்றமாகும்

சமர்பிக்கும் முறைகள்

1. விண்ணப்ப படிவத்தை பெறுதல்
-விண்ணப்பதாரர் விசாரணை குழு அல்லது வேறு எந்த கோட்ட செயலகத்திலோ சம்பந்தபட்ட ஆவண பதிவாளரிடமிருந்து விண்ணப்ப படிவங்களை பெற வேண்டும்.
-விண்ணப்ப படிவங்களை தயார் செய்து விண்ணப்பதாரர்  பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் பிறப்பு நிகழ்ந்த  3 மாதங்களுக்குள்; பதிவு செய்ய – படிவம் 63

2. தேவையான இணைப்பு ஆவணங்கள்

புpறப்பு நிகழ்ந்து 3 மாதங்கள் முடிந்த பிறகு பிறப்பை நிருபிப்பதற்கு தேவையான இணைப்பு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேண்டுகோள் கடிதம்
கிராம சேவகரால்;  வழங்கப்பட்ட பிறப்பு அறிக்கை
பெற்றோர்களின் திருமணச் சான்றிதழ்
குழந்தைகயின் சகோதரி மற்றும் சகோதரரின் பிறப்புச் சான்றதிழ் (இருந்தால்)
பிறப்பு நிகழ்ந்த இடம் பற்றிய எழுத்துப்பூர்வ  ஆதாரங்கள்
தடுப்பு ஊசி அட்டை
குழந்தை நல பணியாளரின் அறிக்கை (முன்னுரிமை )
பிறப்பின் போது உதவி செய்த பெண்ணுடைய ஆதாரம் (பொருந்தினால்;)
ஒருவரின் பிறப்பை பற்றிய ஜாதகம்

3. தேவையான விண்ணப்பங்களை ஒப்படைப்பதல் பதிவாளரிடம் சென்று விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் அல்லது பதிவு தபால் மூலம் விண்ணப்பங்கள் முத்திரையிடப்பட்ட உறையில் சேர்த்து பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

4. குறிப்பு:
-    தபால் மூலம் அனுப்ப வேண்டியிருந்தால், விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
-    குழந்தை வீட்டில்; பிறந்திருந்தால்; கிராம சேவகரிடம் 7 நாட்களுக்குள்ளும்; பதிவாளாடம் 42 நாட்களுக்குள்ளும் தெரிவிக்க வேண்டும்

-    குழந்தை பிறந்து ஒரு வருட காலத்திற்கு பின் பதிவு செய்ய வேண்டுமெனில் தலைமை இணை பதிவாளர்  ஆணையின் படி பதிவு செய்ய வேண்டும்;
-    விண்ணப்பதாரருககு பிறப்புச் சான்றிதழ் தபால் மூலம் குறித்த நேரத்தில் அனுப்பபடும்

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம்:

மு.ப9.00மணி முதல்நண்பகல்12.30 மணி வரை

பி..ப1.00மணி முதல். மாலை 4.45மணி வரை.

 


விண்ணப்ப படிவங்கள் இலக்கம் / பெயர்
    விவரங்கள்
பிறப்பு சான்றிதழ்கான விண்ணப்பம் மற்றும் பதவேடுகளை தேடுவதற்கான படிவம் B-63

புதிய பிறப்பு சான்றிதழை அல்லது பிரதி பெறுவதற்கு

பிறப்பு பற்றி 3 மாதங்களுக்கு பிறகு அறிவித்தல் படிவம் B 6    

3 மாத இடைவெளிக்கு பிறகு பிறப்பை பதிவு செய்தல்


டிப்படியான வழிமுறைகள் (புதிய பிறப்பு சான்றிதழ் வழங்தல்)

படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை கோட்டச் செயலக பதிவாளர் அல்லது விசாரணை குழவிடம் பெற்று கொள்ளலாம்
படி 2: விண்ணப்பதாரர் விண்ணப்படிவத்தை தயாரித்து பூர்த்தி செய்ய வேண்டும்.
படி 3: விண்ணப்பதாரர் இணைப்பு ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்
படி 4: விண்ணப்பங்கள் கோட்ட செயலகத்திலுள்ள பதிவாளருக்கு நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமா அனுப்ப வேண்டும்
 

குறிப்பு:
விண்ணப்ப படிவம் தபால் மூலம் / நேரடியாக முத்திரையிடபட்ட உறையுடன் கொடுக்க வேண்டும்

படி 5:  கோட்ட செயலகம் விண்ணப்பங்களை பெற்று மற்றும் அவற்றை ஆய்வு செய்து ஆவணங்களின் செல்லதக்க காலத்தை சரிபார்கக வேண்டும்.
படி 6: விண்ணப்பதாரர் தபால் மூலமாக பிறப்பு சான்றிதழை பெறுவார்
    குறிப்பு :
    விண்ணப்பதாரர் தகுதி இழந்தால் பதிவாளர் விண்ணப்பம் தகுதி இழந்ததற்கான காரணத்தை கூறி விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் திருப்பி அனுப்புவர்.


காலக்கோடு
செயல்முறைக் காலக்கோடு


உறுதி செய்யப்பட்ட தகவல்களை மருத்துவமனையிருந்து கிடைக்கப்பெற்றால், புதிய பிறப்புச் சான்றிதழை தயார்செய்து 2 அல்லது 3 நாளுக்குள் விண்ணப்பதாரருக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு: உதாரணத்திற்கு உறுதி செய்யப்படுவது கிடைக்கபெறவில்லையென்றால், விண்ணப்பங்களை தயார் செய்வதற்கு தாமதமாகும்; (மருத்துவமனை சிறு புத்தகம் முழுமையாக முடிவடைந்தவுடன் மட்டும் உறுதி செய்யப்பட்டதை அனுப்பும்) இந்த மாதிரியானவைகளுக்கு ஒரு மாதம் கூட எடுத்துக்கொள்ளலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

படி 1: விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
விண்ணப்பப்படிவங்களை; விசாரணை மேஜையிலோ அல்லது கோட்ட செயலகத்திலுள்ள பதிவாளர் வேலை நேரத்தில் இருக்கும் பொழுது கிடைக்கும்.

வேலை நாட்கள் – திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (திங்கட்கிழமை ரூ புதன்கிழமை விரும்பத்தக்கது.)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரைஇ பி.ப 1.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
விடுமுறை நாட்கள் – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

படி 2: விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்தல்
விண்ணப்பத்தை நேரடியாக சமர்ப்பித்தால், காலம் வீணாகாது விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்புவதால் அதன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்றடைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

வேலை நாட்கள் – திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (திங்கட்கிழமை ரூ புதன்கிழமை விரும்பத்தக்கது.)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரைஇ பி.ப 1.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
விடுமுறை நாட்கள் – எல்லா பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியது.


சேவையின் தொடர்பான கட்டணங்கள்
பிறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பம் மற்றும் அல்லது பதிவு செய்வதற்கான ஆய்வு போன்றவற்றிற்கு மட்டும் முத்திரை வரியை செலுத்த வேண்டும்.

a)    பிறப்பிற்கு 3 மாதத்திற்கு பிறகோ அல்லது ஒரு வருடத்திற்கு முன்போ பதிவை அறிவித்திருந்தால், முத்திரை வரி ரூ.5 செலுத்த வேண்டும்.
b)    ஒரு வருடத்திற்கு பிறகு அறிவித்திருந்தால்;  ரூ.5 மட்டும் முத்திரை வரி பொருந்தும்;.
c)    பதிவிற்கான திகதி அல்லது பதிவுக்கான இலக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் முத்திரை வரிக்கான சான்றிதழ் கொடுப்பதற்கு ரூ.5 செலுத்த வேண்டும். (3பிரதிகள்).
e)    பதிவிற்கான திகதி அல்லது பதிவுக்கான இலக்கங்கள் கொடுக்கவில்லையென்றால் சான்றிதழ் சம்பந்தப்பட்ட பதிவு செய்வதற்கான ஆய்வு மூன்று மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது. சான்றிதழ் சம்பந்தப்பட்ட கட்டணம் ரூ.10. (2பிரதிகள்).

குறிப்பு:
ஒவ்வொரு கூடுதல் பிரதிக்கும் ரூ.5 செலுத்த வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்
சாதாரண வகையறைகளுக்குப் பொருந்தாது.

இருந்த போதிலும், பிறப்பிற்கு பிறகு 3 மாதங்கள் முடிந்திருந்தால் பிறப்பை நிருபிப்பதற்கு தேவையான இணைப்பு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் அவையாவன:
•    வேண்டுகோள் கடிதம்
•    கிராம சேவகரால் அளிக்கப்பட்ட பிறப்பு அறிக்கை
•    பெற்றோருடைய திருமணச் சான்றிதழ்.
•    குழந்தைகளுடைய, சகோதரிகளுடைய மற்றும் சகோதர்களுடைய பிறப்புச் சான்றிதழ் (இவற்றில் ஏதாவது).
•    பிறந்த இடத்தினுடைய எழுத்து வடிவ சாட்சி.
•    தடுப்பூசி அட்டை
•    குடும்ப நல பணியாளருடைய அறிக்கை.
•    பிறப்பிற்கு உதவியான செவிலித் தாயின் சாட்சி(தேவைப்பட்டால்)
•    நபரின் பிறப்பு ஜாதகம்
•    மாணவரின் பள்ளி வருகைக்கான பதிவுத்தாள்.



அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.


Mrs.M.A.S.Kanchana Gunawardhana
தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-05-08 08:07:45
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-13
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 233