தகைமைகள் :
I. தற்போது மத்திய வகுப்பினருக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கு மதிப்பீட்டுப் பணத்தை அறவிட்டுக் கொண்டு அளிப்புப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
II. இது தொடர்பாகக் குறித்த அனுமதிப் பத்திரத்தைச் சமர்ப்பித்தல்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
பிரதேசச் செயலாளர்/ மாகாணக் காணி ஆணையாளர் ஊடாகக் குறித்த ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
I. காணி முறையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என அபிவிருத்தி அறிக்கை
II. குறித்த காணியின் பெறுமதி மதிப்பீட்டு அறிக்கை
III. மதிப்பீட்டுப் பணம் மற்றும் சேவைக் கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டுக்கள் அல்லது இவை செலுத்தப்பட்டுள்ளதென பிரதேசச் செயலாளரின் விதப்புரை
IV. பூரணப்படுத்தப்பட்ட கா.ஆ. 156 ஆம் இலக்கப் படிவம் 03 பிரதிகளில் மற்றும் ரேகை வரைபடம்
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
பிரதேசச் செயலாளர் அலுவலகங்கள்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
காணியின் பெறுமதி மதிப்பீட்டுப் பணம் மற்றும் சேவைக் கட்டணம் 08/1982 ஆம் இலக்கச் சுற்றறிக்கை மற்றும் 1990 மே மாதம் 16 ஆந் திகதிய 5/மா.ப இலக்கச் சுற்றறிக்கை களுக்கமைய அறிவிடப்படுகின்றது. 05 ஏக்கர் அலகு ஒன்றுக்கு ரூபா 250/- சேவைக் கட்டணம் அறவிடப்படுகின்றது.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை :
02 மாதங்கள் வரையிலான காலப் பகுதி
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
உறவு முறை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது சத்தியப் பிரமாணம் ஊடாகச் சமர்ப்பித்தல்பட வேண்டும்.
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
இயைபுடையதல்ல
அமைப்பு பற்றிய தகவல்காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.
திருமதி. த . முருகேசன் தொலைபேசி:0112-797400 தொலைநகல் இலக்கங்கள்:0112-864051 மின்னஞ்சல்:info@landcom.gov.lk இணையத்தளம்: www.landcom.gov.lk
|