அறிமுகம்
மத்திய சுற்றாடல் அதிகாரசபை சுற்றாடல் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை அல்லது சிக்கல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும்.
உங்களின் பிரச்சினை கீழே குறிப்பிடப்பட்ட வகைகளைச் சார்ந்ததாக இருப்பின் அதனைத் தீர்த்துவைக்க எடுக்கும் காலத்தைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு அவற்றைக் கீழே காட்டப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட மத்திய சுற்றாடல் அதிகாரசபை விதப்புரை செய்யூம்.
பணி |
ஏற்புடைய நிறுவனம் |
மணல் அகழ்வூ கல் தகர்த்தல் மண் அகழ்தல் போன்றவை
|
புவிசரிதவியல் அளவீடுகள் சுரங்கங்கள் பணியகம் |
தொலைபேசி கோபுரங்களை நிர்மாணித்தல்
|
தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு
|
காணி மீட்டல்
|
இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்
|
வனசீவராசிகளும் அதனோடு தொடர்புடைய விடயங்களும்
|
வனசீவராசிகள் திணைக்களம்
|
இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கைத்தொழில்களுடன் தொடர்புடைய பொது மக்கள் முறைப்பாடுகள்
|
இலங்கை முதலீட்டுச் சபை
|
கரையோரம் பேணல் தொடர்பான பொது மக்கள் முறைப்பHடுகள்
|
கரையோரம் பேணல் திணைக்களம் |
வயற்காணிகளை நிரப்புதல்
|
கமநல சேவைகள் ஆணையாளர்
|
முறைசாரா வண்ணம் கழிவூப் பொருட்களை அப்புறப்படுத்தல்
|
உள்ளுராட்சி நிறுவனங்கள் |
பொது மக்கள் முறைப்பாடு எவ்வாறு செய்யப்படல் வேண்டும்?
கடிதம் மூலமாகவோ மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமையத்திற்கோ அதன் மாகாண அலுவலகங்களுக்கோ நேரடியாக வருகை தந்து ஒப்படைப்பதன் மூலமாகவோ.
மின்னஞ்சல் மூலமாக - chandrani@cea.lk
அவசர தொலைபேசி இலக்கம் மூலமாக - +94-112-888999
பொது மக்களின் முறைப்பாடுகளை பரிசீலனை செய்யூம் செயற்பாடு
பொது மக்களின் முறைப்பாடு வேறு நிறுவனங்களுடன் தொடர்புடையதாயின் அந்த முறைப்பாட்டாளருக்கு உரிய அறிவித்தல்களுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆற்றுப்படுத்தப்படும்.
அது மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விடயப்பரப்புடன் தொடர்புடைய முறைப்பாடு எனின் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
அலுவலக நேரங்கள்
மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் மாகாண அலுவலகங்களில் வாரத்தின் வேலை நாட்கள் அனைத்திலும் மு.ப. 09.00 மணியில் இருந்து பி.ப. 04.00 மணி வரை.
உள்ளுராட்சி நிறுவனங்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக நேரங்களைப் பேணி வருகின்றன.
முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள எடுக்கும் நேரம்
14 நாட்களில் இருந்து 02 மாதங்கள் வரை.
அமைப்பு பற்றிய தகவல்மத்திய சுற்றாடல் அதிகாரசபை
இல்.104,
டெனிசில் கொப்பேகடுவே மாவத்தை,
பத்தரமுல்ல.
தொலைபேசி:011-7877277, 7877278, 7877279, 7877280 தொலைநகல் இலக்கங்கள்:011-2888999 மின்னஞ்சல்:complaint@cea.lk இணையத்தளம்: www.cea.lk
|