இலங்கையில் படைப்பாக்கங்களில் ஈடுபட்டிருக்கின்ற வயது 18 க்கு மேலானவர்கள் மற்றும் கலைஞர்கள் இப் போட்டிக்கான படைப்புகளை முன்வைப்பதற்கான தகைமை பெறுவதுடன் ஓவியங்கள், சிற்பங்கள், நிலக்காட்ச்சிகள், எழுத்தோவியங்கள், அச்சுக்கலை, சுவரோவிய பிரதிகள், என்ற போட்டிப் பிரிவிகளில் ஓர் பிரிவிற்காக ஆக கூடிய அளவில் மூன்று படைப்புகள் முன்வைத்தல் வேண்டும். அவ்வாறு முன்வைக்கின்ற நிர்மாணங்கள் கண்காட்ச்சியில் வைப்பதற்கு தகுந்த விதத்திலும் சிறப்பாகவும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
இப் போட்டியின் முடிவு இரு சுற்றுகளைக் கொண்டதாக அமைகப்பட்டுள்ளது. இதற்காக விசேசமாக தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவமொன்று இல்லாததுடன் முன் வைக்கப்படுகின்ற படைப்பின் தலைப்பு, கலைஞ்ஞரின் பெயர், முகவரி, வயது, தொலைப்பேசி இலக்கம் ஆகிய விபரங்கள் உட்படுத்தி சுயமாக தயாரித்துக்கொள்ளப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் முதலாம் சுற்றுக்காக தெளிவான நிறப் புகைப்படமோ அல்லது CD யைக்கொண்டு தனது படைப்பினை முன்வைக்க முடியும். தெளிவற்ற அல்லது தொழில்நுட்ப தவறுகளைக்கொண்ட படைப்புகளை முடிவுக்காக சமர்பிக்கப் படாததோடு ஒவ்வொறு படைப்புகளில் மேற்படி விபரத்தினை வெவ்வேறாக இணைத்திருந்தல் கட்டாயம்.
ஊடகமூலமாக அறிவித்திருக்குமாறு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதிக்கு முன்னர் அலுவலக நேரத்தினுள், செயலாளர், தேசிய ஓவிய-சிற்ப துணைச்சபை, இலங்கை கலைக்கழகம், தேசிய கலைமன்றம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07. என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமோ அல்லது நேரில் வந்தோ ஒப்படைக்க வேண்டும்.
சேவையழிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.
சுய வாழ்க்கை தரவுச்சீட்டு
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணைப் பணிப்பாளர், இப்பணி பொறுப்பினை கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராவர்.
பத்திரிகை அறிவித்தலுக்கமைய விண்ணப்பப் படிவத்தை சுயமாக செய்துக்கொள்ள வேண்டும்.