தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது 1991 இன் இல. 37 தே.போ.ஆ. சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் கடமைகளாவன ஒம்னி வசுக்களால் வழங்கப்படும் பிரயாணிகள் போக்குவரத்து தொடர்பில் தேசிய கொள்கை மட்டில் அரசாங்கத்துக்கு அக்கொள்கைக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மதியுரை வழங்குவதாகும். அதாவது;
· பொதுமக்களின் பிரயாணிகள் போக்குவரத்து தேவைகள் மட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தினை ஒம்னி வசுச் சேவைகளிலிருந்து கிடைக்கின்றனவா என்பதை கண்காணிக்கவும் அந்தச் சேவைகளில் ஆகக் குறைந்தளவு மட்டத்தில் பேணப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கும்
· அதிகாரமளிக்கப்பட்ட எந்தவொரு ஆளும் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டு ஒரு பிரயாணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தை வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ கூடும் என்பதையும் தனியான கட்டணத்தில் பிரயாணிகளை கொண்டு செல்வதற்கான ஒம்னி வசு ஒன்றை உபயோகிப்பதற்கான அதிகாரத்தை நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்குவதற்கான வேறு அதிகாரியையும் குறிப்பிட்டுக் கூறுவதற்கும்
· எந்தவொரு எழுத்து மூலமான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அமைவாக பிரயாணிகள் சேவை மட்டில் இந்தச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைகளுக்கு அமைவாக அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளோர் இணங்கி நடக்கின்றார்களா என்பதை கண்காணிக்கவும் நிறைவேற்றவும்
· அதிகாரமளிக்கப்பட்ட ஆள் ஒருவரால் வழங்கப்படக்கூடியதான பிரயாணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களுக்கான படிவத்தை வரையறை செய்தல்
· அதிகாரமளிக்கப்பட்ட எந்தவொரு ஆளாலும் வழங்கப்படவுள்ள அல்லது புதுப்பிக்கப்படவுள்ள பிரயாணிகள் சேவை அனுமதிப்பத்திரங்கள் மட்டில் அறவிடப்படவுள்ள வீதங்களை தீர்மானித்தல்
· பிரயாணிகள் சேவை அனுமதிப்பத்திரத்துக்கான விண்ணப்பக்காரர் ஒருவர் அதிகாரமளிக்கப்பட்ட ஆளிடம் வாகனத்தின் தகுதி, பிரயாணிகளை கொண்டு செல்லும் விதம் மற்றும் ஏனைய சான்றுகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றி விபரித்துக்கூறுதல்.
· அதிகாரமளிக்கப்பட்ட ஆள் ஒருவரால் வழங்கப்பட்ட பிரயாணிகள் சேவை அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் இச் சட்டத்தின் கீழான அதிகாரங்களையும் கடமைகளையும் பிரயோகிக்கவும் நிறைவேற்றவும் ஆணைக்குழுவுக்குத் தேவையான திரட்டுக்களையும் தகவல்களையும் சமர்ப்பிக்கும் படி தேவைப்படுத்தவும்
· ஒம்னி வசுச் சேவைகள் தேவையாயுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் அதாவது அரசாங்கத் திணைக்களங்கள், நிறுவனங்கள் ஏனையவர்களுடனும் தொடர்பினை ஏற்படுத்துவது உட்பட
I. அஞ்சலுக்கான ஒருவண்டி மற்றும்
II. பள்ளிக்கூடப் பிள்ளைகள், பல்கலைக்கழக தொழிநுட்ப நிறுவனங்கள் மற்றும் அதுபோன்ற நிறுவனங்களின் மாணவர்களுக்கும் சலுகை வீதங்களில் சேவைகளை வழங்கவும்
· குறிப்பிட்ட பிரதேசங்களுக்கென ஒம்னி வசுச் சேவைகளுக்கென பிரயாணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கும்
· இலாபகரமில்லாத பாதைகளில் ஒம்னி வசுச் சேவைகளை போட்டி விலைகூறலுக்கு கவனம் செலுத்தி அச் சேவைகளை வழங்குநருடன் ஒப்பந்தங்களைச் செய்வதன் மூலமும் தேவையானவிடத்து அச் சேவைகளை வழங்குநருக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர்களால் வழங்கப்படும் சேவையின் தன்மையை பொறுத்து அச் சேவை வழங்குநர்களால் அறவிடப்படக்கூடியதான கட்டணங்களை விளக்கிக் கூறுவதன் மூலமும் வசுச் சேவைகளை உறுதிப்படுத்துவதற்கும்
· எந்தவொரு ஆளுடனும் மாகாணங்களுக்கிடையான ஒம்னி வசுச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளவும் அதன் மட்டிலான பிரயாணிகள் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கும்
· அதிகாரமளிக்கப்பட்ட ஆட்களுக்கான முகாமை நிபுணத்துவம் மற்றும் உதவிகளையும் வழங்குவதுடன் ஒம்னி வசுச் சேவைகளை வழங்குவது தொடர்பிலான அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவது மட்டில் தேவையான வேறு எல்லா உதவிகளையும் அல்லது மதியுரைகளையும் அவர்களால் வேண்டப்பட்டவிடத்து அதிகாரமளிக்கப்பட்டவருக்கு வழங்குதல்
· ஒம்னி வசுக்களில் பண்டங்களையும் காவுவதற்கான ஒழுங்குகளைச் செய்தல்
தொடர்புக்கான விபரங்கள்:
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
இல 241, பாக் வீதி,
கொழும்பு-5,
தொலைபேசி 011-2595555,
பாக்ஸ் 011-2503969, 011-2503725
மின்அஞ்சல்- info@ntc.gov.lk
அமைப்பு பற்றிய தகவல்Ministry of Transport
7th Floor, Sethsiripaya, Stage II, Battaramulla.
தொலைபேசி:0112 187 200 / 0112 187 201 தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226 மின்னஞ்சல்:secmintransport@gmail.com இணையத்தளம்: www.transport.gov.lk
|