இலங்கையில் 2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் செவிப்புலனற்றவர்கள், பாதியளவில் செவிப்புலனற்றவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 389,077 ஆகும். அத்துடன் தொடர்பாடல் சிரமமுள்ள நபர்களின் எண்ணிக்கை 180,833 ஆகும். இவர்களுக்கான கல்வி, சமூக, கலாசார சேவைகளை வழங்குவதோடு மருத்துவ, சுகாதார மற்றும் சட்ட வசதிகளை வழங்குவதற்காகவும் தொடர்பாடல் ஊடகமாக இருப்பது சமிக்ஞை மொழியாகும். இந்த சமிக்ஞையை மொழியாக ஏற்றுக்கொள்ளுவதற்கு 2010.09.05ஆம் திகதி அமைச்சரவை கொள்கைத் தீர்மானமொன்றையும் எடுத்துள்ளது.
சமிக்ஞை மொழி மொழிபெயர்ப்பு சேவையை வழங்குவதற்காக தற்பொழுது திணைக்களத்துடன் இடைச் சேர்க்கப்பட்டு 06 சமிக்ஞை மொழி மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்கள் சேவையாற்றுகின்றனர். செவிப்புலனற்றவர்களின் தொடர்பாடலுக்காக அரச நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுவதற்காக எமது சமிக்ஞை மொழி உத்தியோகத்தர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். உதா:- பொலிஸ் நிலையம், நீதிமன்றம், வைத்தியசாலைகள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்கள்.
அத்துடன், ஒவ்வொரு நாளும் ரூபவாஹினி இரவு 08 மணி பிரதான செய்தி ஒளிபரப்புக்கு எமது நிறுவனத்திலிருந்து சமிக்ஞை மொழி மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்களின் சேவை வழங்கப்படுகின்றது.
அமைப்பு பற்றிய தகவல்Department of Social Services
2nd Floor,
Sethsiripaya Stage II,
Battaramulla.
Mr. N.G.P.G. Samarawikrama தொலைபேசி:0112187050 தொலைநகல் இலக்கங்கள்:0112186276 மின்னஞ்சல்:dirssdss@gmail.com இணையத்தளம்: www.socialservices.gov.lk
|