“மஹிந்த சிந்தனை” அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பயிற்சிப் பாடநெறிகள் மூலமாக ஊடகவியலாளர்களின் தொழில்சார் திறமைகளை விருத்தி செய்வதற்கான நிதியூதவிகளை வழங்க மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு எதிர்பார்க்கின்றது.
நோக்கம்
21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்நோக்கக்கூடியவாறு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பாடநெறிகள் மூலமாகத் தமது தொழில்சார் திறமைகளை விருத்தி செய்துகொள்ள வாய்ப்பளித்தலும் அவர்களை அதன்பால் ஊக்குவூரித்தலும்.
இலக்குக் குழுவினர்
நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அச்சு மற்றும்இலத்திரனியல் ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்கள்.
நிதிசார் வசதிகள்
1. உள்நாட்டுப் கல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி ஃ பயிற்சி நிறுவனங்கள் மூலமாக நடாத்தப்படுகின்ற குறுங்காலப் பயிற்சிப் பாடநெறிகளுக்காக. (06 மாதங்களுக்கு குறைவான கால எல்லை)
2. நீண்டகால சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பாடநெறிகளுக்காக (06 மாதங்களுக்கு மேல்) தெரிவூ செய்யப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்காக அவர்களின் பாடநெறிக் கட்டணங்களைச் செலுத்தித் தீர்க்க அவசியமான நிதி வசதிகள் இக்கருத்திட்டத்தின் கீழ் கவனத்திற் கொள்ளப்படும்.
3. இலங்கையினர் அங்கீகாரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற மக்கள் தொடர்பாடல் விடயத்துறையூடன் தொடர்புடைய பட்டப்படிப்புப் பாடநெறிஇ பட்டப்பின் படிப்புப் பாடநெறிஇ கலை முதுமானிப் பட்டப் பாடநெறிகளுக்காக மாத்திரம்.
4. இந்நிதி வசதிகள் தெரிவூ செய்யப்படுகின்ற ஊடகவியலாளர்களின் வேண்டுகோளின் பேரில் மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சினால் நேரடியாகவே சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்திற்குச் செலுத்தப்படும்
தெரிவூ செய்வதற்கான அளவூகோல்கள்
1. அரசாங்க அல்லது தனியார் ஊடக நிறுவனமொன்றில் அங்கீகரிக்கப்பட்ட முனைப்பான ஊடகவியலாளரொருவராக அமைதல் அல்லது சுதந்திர ஊடகவியலாளரொருவராக செயலாற்றுதல்.
2. பல்கலைக்கழகங்களால் ஃ அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்ற பயிற்சிப் பாடநெறிகள் தொடர்பிலான தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டுமென்பதோடு மேற்படி பாடநெறிக்காக தெரிவூ செய்யப்பட்டிருத்தலும் வேண்டும். (தெரிவூ செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் கடிதத்தின் பிரதியை விண்ணப்பப் பத்திரத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.)
3. வயது 18-55 வருடங்களுக்கு இடைப்பட்டதாக அமைதல் வேண்டும்.
தெரிவூ செய்யப்படும் வழிமுறை
1. மக்கள் தொடர்பாடல்இ தகவல் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட ஊடகவியலாளகளையூம் உள்ளடக்கிய தெரிவூக் குழுவொன்றினால் பொருத்தமான விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரிட்சைக்கு ஆற்றுப்படுத்தப்படுவர்.
2. தெரிவூ செய்தல் தொடர்பில் அமைச்சின் செயலாளரது முடிவே இறுதித் தீர்மானம் ஆகும்.
3. மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சினால் செய்தித்தாள் அறிவித்தல் மூலமாக விளம்பரம் பிரசுரிக்கப்படுமிடத்துஇ அதில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப் படிவம் மற்றும் அறிவூறுத்தல்களுக்கு அமைவாக விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
இக்கடன் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள
பெயர் |
பதவி |
பிரிவூ |
தொலைபேசி |
தொலைபேசி நீடிப்பு |
திரு. பிரியந்த மாயாதுன்னே |
மேலதிக செயலாளர் (அபிவிருத்தி)
|
அபிவிருத்திப் பிரிவூ
|
+94-112-513943 |
158 |
திரு. னு.னு. வனிகநாயக்க |
சிரேட்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
|
அபிவிருத்திப் பிரிவூ |
+94-112-513466 |
149 |
திருமதி பு.டு.னு. தஹநாயக்க
|
உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
|
அபிவிருத்திப் பிரிவூ |
+94-112-513470 |
157 |
செல்வி அரிகா தர்மரத்ன
|
முகாமைத்துவ உதவியாளர்
|
அபிவிருத்திப் பிரிவூ |
+94-112-513459/60 |
159 |
பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சினூடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அமைப்பு பற்றிய தகவல்Ministry of Mass Media
No 163,
"Asisdisi Medura",
Kirulapone Avenue,
Polhengoda,
Colombo 05.
தொலைபேசி:0112513459, 0112513498, 0112512321 தொலைநகல் இலக்கங்கள்:0112513462, 0112513458, 0112513437 மின்னஞ்சல்:secretary@media.gov.lk இணையத்தளம்: www.media.gov.lk
|