நாணயக் கடித அறிவிப்பு
உலகம் பூராக 1000க்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுடன் இலங்கை வங்கி முகவர் வங்கியியல் தொடர்புகளை மேற்கொள்கின்றது. எனவே, இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு உலகம் பூராக உள்ள இறக்குமதியாளர்களுடன் துரிதமாக தொடர்புககொள்வதற்கும் கொடுக்கல்வாங்கல் வசதிகளையும் இலங்கை வங்கி ஊடாக மேற்கொள்ள முடியும்.
ஈரானுக்குப் பண்டங்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் வாடிக்கையாளர் ஒருவருக்கு இலங்கை வங்கி ஊடாக தனது கொடுக்கல் வாங்கல்களை மிகவும் விரைவாக மேற்கொண்டு பணம் பெற்றுக் கொள்ளும் வசதி தற்பொழுது உள்ளது. ஈரானின் எல்லா வங்கிகளும் தற்பொழுது இலங்கை வங்கியுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதால் கொடுப்பனவுகளை மிகவும் துரிதமாக இலங்கை வங்கியால் மேற்கொள்ள முடியுமாகியுள்ளது.
நாணயக் கடிதங்களுக்கான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளல்.
இலங்கை வங்கியின் முகவர் வங்கி வலையமைப்பூடாக கிடைக்கும் நாணயக்கடிதங்களுக்கு உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே, தங்களுக்குரிய நாணயக் கடிதங்களுக்கு கூடிய பாதுகாப்புக் கிடைக்கின்றது.
ஏற்றுமதி உண்டியல் கொள்வனவு
இறக்குமதியாளன் பண்டங்களுக்கான கொடுப்பனவு சில தினங்களுக்கு தாமதிக்குமெனக் கூறலாம்.
அத்தகைய சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர்களது ஆவணங்களை வங்கி கொள்வனவு செய்து வாடிக்கையாளருக்கு பணம் செலுத்தும் ஒரு முறையாகும்.
உண்டியல் சேகரிப்பு
கிடைத்த ஏற்றுமதி உண்டியல்களை துரிதமாக தயாரித்து விரைவில் வழங்கிய வங்கிக்கு சமர்ப்பித்து கொடுப்பனவை மேற்கொள்வதற்கு வங்கி நடவடிக்கை எடுக்கும்.
தீர்வைச் சலுகை
இலங்கை சுங்க இலாகா வெளியிட்ட இல.1053/12 வர்த்தமானி அறிவித்தலுக்கேற்ப இறக்குமதியாளர்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை முன்னேற்பாடுகளை பெற்றுக் கொள்ள வங்கி உதவும்.
கப்பலேற்ற முன் வசதிகள்
பண்டங்களுக்கான கட்டளையை ஏற்றுமதியாளனுக்குக் கிடைத்து அதன் உற்பத்தி தொடக்கம் கப்பலேற்றும் வரையான செயற்பாடுகளுக்கு நிதி தேவைப்படுகின்றது.
தனது வாடிக்கையாளனுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உற்பத்திச் செலவு, தொழிற்படு மூலதனம் ஆகியவற்றுக்குத் தேவையான நிதி வசதிகளை இலங்கை வங்கி வழங்குகின்றது.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|