சேமிப்புப் புத்தகமொன்று காணாமற் போனால்,
• எழுத்து மூலம் கிளைக்கு அறிவிக்க வேண்டும்.
• சம்பந்தப்பட்ட படிவங்களை கிளையிலிருந்து பெற்று பூர்த்தி செய்து கிளைக்கு ஒப்படைக்க வேண்டும்.
வங்கி உடனுண்டியல் / கொடுப்பனவுக் கட்டளை / நிலையான வைப்புப் பற்றுச் சீட்டு காணாமற் போனால்,
• சம்பந்தப்பட்ட கிளைக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
• சம்பந்தப்பட்ட இழப்பீட்டுக் காப்புறுதிப் படிவத்தைப் பூர்த்தி செய்து புதிதாக வங்கி உடனுண்டியலை / கொடுப்பனவுக் கட்டளையை நிலையான வைப்புப் பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.
ATM / VISA அட்டை மற்றும் கடனட்டை காணாமற் போனால்,
• காணாமற்போய்விட்டதென்பதை எழுத்து மூலம் தனது கையொப்பத்துடன் அட்டைக்கான கொடுப்பனவை நிறுத்தும்படி பெக்ஸ் மூலம் அறிவிக்க வேண்டும்.
• காணாமற் போனமையைப் பற்றிப் பொலிஸில் முறைப்பாடு இட வேண்டும்.
• புதியதொரு கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பாதுகாப்பு வைப்புப் பெட்டியின் சாவி காணாமற் போனால்,
• கிளைக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
• செலவை வாடிக்கையாளரிடமிருந்து அறவிட்டு புதியதொரு சாவி பொருத்தப்படும்.
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட வங்கி உண்டியல் காணாமற் போனால்,
• பின்வரும் விபரங்களுடன் உண்டியல் முகவரியிட்ட கிளைக்கு அறிவிக்க வேண்டும்.
அ) உண்டியல் இல.
ஆ) தொகை
இ) உண்டியலை வழங்கிய வங்கியின் பெயர்
ஈ) வழங்கிய வங்கியின் பற்றுச் சீட்டுப் பிரதி
பிரயாணிகளின் காசோலை காணாமற் போனால்,
• காசோலையைக் கொள்வனவு செய்த வங்கிக்கு அறிவிக்க வேண்டும்.
• கொள்வனவு செய்த வங்கியின் பற்றுச் சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கணக்கு உரிமையாளர் ஒருவர் மரணித்தால்,
தனிநபர் கணக்கு
• மரணித்தவரின் சொத்துப் பெறுமதி ரூ.500,000/= க்குக் குறைவாயின் சம்பந்தப்பட்ட படிவத்தை கிளையிலிருந்து பெற்று பின்வரும் ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.
அ) மரணச் சான்றிதழ்
ஆ) திருமணப் பதிவுச் சான்றிதழ்
இ) பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்
ஈ) மரணித்தவர் விவாகமாகாதவராயின் அவரது பெற்றோர், சகோதர சகோதரிகள் ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ்.
• மரணித்தவர் சம்பந்தப்படும் பின்வரும் சட்டங்களுக்கமைய நிலுவை விண்ணப்பதாரர்களுக்கிடையே பகிரப்படும்.
மலைநாட்டுச் சட்டம்
உரோம டச் சட்டம்
முஸ்லிம் சட்டம்
தேசவழமைச் சட்டம்
• மரணித்தவரின் சொத்து ரூ.500,000/= க்கு அதிகமாயின் மாவட்ட நீதிமன்றத்தில் சொத்துரிமை வழக்கைத் தொடர வேண்டும்.
கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர் மரணித்தால்,
• உயிர் வாழும் மற்றையவருக்கு நிலுவை உரித்தாகும்.
கணக்கு வைத்திருப்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது பணம் மீளப் பெற,
• அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையின் வைத்தியர் பணம் மீளப்பெறும் படிவத்தில் கணக்கு உரிமையாளரின் கையொப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
குருடர் ஒருவருக்குக் கணக்குத் திறப்பதாயின்,
• நெருங்கிய உறவினரொருவருடன் கூட்டுக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும்.
கணக்கு வைத்திருக்கும் கிளையைத் தவிர்ந்த ஏனைய கிளைகளிலிருந்து பணம் மீளப் பெற முடியுமா? வைப்புச் செய்ய முடியுமா?
• கிளைகள் யாவும் கணனி வலையமைப்புடன் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதால் எந்தவொரு கிளையிலிருந்தும் பணம் எடுத்தல் / வைப்புச் செய்தலை மேற்கொள்ளலாம்.
உத்தரவாதிகளின் பொறுப்பு
• கடன்பெறுநர் கொடுப்பனவை மேற்கொள்ளத் தவறினால் உத்தரவாதியினதும் பொறுப்பு கடன்பெறுநரது பொறுப்புக்குச் சமனாகும்.
கொடுப்பனவு பெறுநரின் கணக்குக்கு மாத்திரம் ” எனக் குறுக்குக் கோடிடப்பட்டிருந்தால்,
• காசோலையில் பெயர் குறிக்கப்பட்ட நபரின் கணக்கினூடாகவே காசோலையை மாற்றலாம்.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|