“கப்ருகா “ கடன் திட்டம்
தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் அனுசரணையுடன் தென்னை அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான ஒரு கடன் திட்டம்.
தகுதி
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
• வங்கிக்கு அல்லது எவையேனும் நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
• செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
பிணையங்கள்
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய இரண்டு கடன் பெறுநர்கள் அல்லது இரண்டு நபர்களின் உத்தரவாதம்.
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏனைய பிணையங்கள்
தேவையான ஆவணங்கள்
• கடன் விண்ணப்பம்
• ஆதனம் ஈடு வைப்பதாயின் ஆதன உரிமைச் சான்றிதழ் (உறுதி), சுவீகரிக்கப்படாமை பற்றிய சான்றிதழ், வீதி ரேகை சான்றிதழ்.
• தென்னைப் பயிர்ச்செய்கை சபையால் உறுதிப்படுத்தப்பட்ட பண்ணைத் திட்டம், செய்திட்ட வரவு செலவு மதிப்பீடு, கடன் விடுவிக்கும் பதிவேடு.
“குர்ஷி நவோதய “ - கடன் திட்டம்
விவசாயம், சேதன விவசாயம், கால்நடை வளா்ப்பு, மீன்பிடி மற்றும் இவ்வகையைச் சேர்ந்த கைத்தொழிற்சாலைகளுக்கான கடன்களை வழங்குதல்.
தகுதி
• வங்கி வாடிக்கையாளராக இருத்தல்
• வங்கிக்கு அல்லது எவையேனும் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
• செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
பிணையங்கள்
• கடன்பெறுநர் இருவரது உத்தரவாதம்
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு நபர்களின் தனிநபர் உத்தரவாதம் அல்லது
• வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய பிணையங்கள்
ஆவணங்கள்
• தனிநபர் கடன் விண்ணப்பம்
• உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|