தகைமைகள்
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு, 1971ஆண்டின் 45 ஆம் இலக்க, ஊழியரைத் தொழிலிலிருந்து முடிவுறுத்தும் ( திருத்த) சட்டத்தின் கீழ் (விசேட ஏற்பாடுகள்) உள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களால் மேவப்படக் கூடிய தொழிலில் ஈடுபட்டுள்ளவராக இருத்தல் வேண்டும்.
- கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டம்.
- சம்பளச்சபைகள் கட்டளைச் சட்டம் ( இக்கட்டளைச் சட்டத்தின் 6.2 ஆம் பிரிவின் கீழ் வர்த்தமானத்தில் உள்ள ஏதாவது ஒரு தொழிலில் இருத்தல்)
- தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம்,
- நிறுவனத்தில் 15 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேவை புரிதல் வேண்டும்.
- ஊழியரின் சேவை முடிவுறுத்தப்பட்ட திகதியில் அல்லது அதற்கு முன்னர் 06 மாதத்திற்குள் ஏதாவது ஓர் காலத்தில்.
- தொழில்தருநர் ஊழியரைத் தொழிலிருந்து முடிவுறுத்தியிருத்தல் வேண்டும்.அனுமதி வழங்கப்பட்ட சேவையை முடிவுறுத்துதலுக்கு அல்லது எதிர்காலத்தில் ஆபத்துச் சேவையை முடிவுறுத்துதல்களுக்கு முறைப்பாடு ஒன்றை மேற் கொள்ள முடியாது.
கீழே குறிப்பிடப்பட்ட ஊழியர்கள் இச்சட்டத்தின் கீழ் நிவாரணம்பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- ராஜினாமாச் செய்த ஊழியர்கள்
- குறிப்பிட்ட நிலையான காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய மற்றும் ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததன் பேரில் சேவை முடிவுறுத்தப்பட்ட ஊழியர்கள்.
- தொழில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட ஓய்வூதிய வயதை அடைந்து ஓய்வூதியம் பெற்ற ஊழியர்கள்.
- ஒழுங்காற்று தண்டனையின் கீழ்தொழிலிலிருந்து விலக்கப்பட்ட ஊழியர்கள்.
- கூட்டுறவுச் சங்கங்கள், உள்ளூராட்சி அதிகார சபைகள், மாகாண சபைகள், அரசாங்கத்தால் உள்வாங்கப்பட்ட நிறுவனங்கள், நியதிச்சட்ட அதிகார சபைகள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச கூட்டுத் தாபனங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
குறிப்பிட்ட விண்ணப்பப்படிவம் இல்லை. விண்ணப்பம் தயாரிக்கும் சந்தர்ப்பத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.
- ஊழியரின் முழுப்பெயர்
- நிரந்தரமுகவரி
- நியமனத் திகதி
- பதவி
- ஊழியரின் பிறந்த திகதி
- ஊ. சே. நி. அங்கத்தவர் இலக்கம்
மேலுள்ள விடயங்களுக்கும் மேலதிகமாக, தொழில் முடிவுறுத்திய திகதி, தொழில் முடிவுறுத்திய தற்கான காரணம், பணிப்பாளர்கள்/உரிமையாளர்/ பங்குதாரர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள்.
விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-
பொருத்தமற்றது.
விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
பொருத்தமற்றது.
சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-
பொருத்தமற்றது.
சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)
பொருத்தமற்றது.
உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
- தொழில் முடிவுறுத்தியதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
- நட்ட ஈடு கணிப்பதற்காக, கடைசி மாதச் சம்பளப் பட்டியல்.
- தேசிய அடையாள அட்டை இலக்கம்
- தொழில் முடிவுறுத்தும் போது பெற்ற சம்பளம். (அடிப்படைச் சம்பளத்திற்கும் மேலதிகமாக படிகள் ஏதாவது பெற்றிருப்பின், தயவு செய்து அடிப்படைச் சம்பளம் மற்றும் படிகளை வேறுவேறாகக் குறிப்பிடவும் )
- தொழில் புரிந்த நிறுவனத்தின் சரியான பெயர்
- தொழில் புரிந்த நிறுவனத்தின் சரியான முகவரி (இயலுமாயின், தொழில் புரிந்த கம்பனி பதிவுசெய்த கம்பனிகள் பதிவு செய்யும் படிவம் 01 அல்லது 20 இன் பிரதி அல்லது சான்றுபடுத்திய பிரதி ஒன்றை சமர்ப்பிக்கவும்.)
- நிறுவனத்தின் ஓய்வு பெறும் வயது
- நிறுவனத்தில் தொழில் செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை
- நிறுவனத்தின் உற்பத்தியின் தன்மை
- தொடர்பு இலக்கங்கள்
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
பதவி
|
பிரிவு
|
தொலை பேசி
|
தொலை நகல்
|
மின்னஞ்சல்
|
பிரதித் தொழில் ஆ ணையாளர்
|
முடிவுறுத்தும் பிரிவு
|
0112368048
|
0112368048
|
|
உதவித் தொழில் ஆணையாளர்
|
- “ -
|
0112552887
|
|
|
உதவித் தொழில் ஆணையாளர்
|
- “ -
|
01123699445
|
|
|
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
பொருத்தமற்றது.
விண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
பொருத்தமற்றது.
அமைப்பு பற்றிய தகவல்தொழில் திணைக்களம்
தொழிற்செயலகம்,
இல.: 41,
கிருள வீதி,
கொழும்பு 5. திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர தொலைபேசி:0112581142/ 0112581143/ 0112581146/ 0112369373 தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145 மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk இணையத்தளம்: www.labourdept.gov.lk
|