சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மற்றும் நியதிகளுக்கு அமைவாக உதவி செய்வதற்கு கடன் திட்டமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கருத்திட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு அல்லது நடைமுறையிலுள்ள தொழில் ஒன்றினை விரிவாக்குவதற்கு கடன் பெற முடியும்.
நோக்கம்
• புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு நிதி வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் தற்பொழுதுள்ள தொழில்முயற்சிகளை சர்வதேச மட்டத்திற்கு விரிவாக்குதல்.
யாருக்கு
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாண்மையாளர்கள்
தகுதியுடைய கடன்துறைகளும் உப கடன்துறைகளும்
துறை
|
உப துறை
|
விவசாய மற்றும் விவசாய அடிப்படக் கைத்தொழில்கள்
|
மீன்பிடி
தெங்கு அடிப்படை உற்பத்திகள்
அரிசி ஆலை
பாற்பண்ணை
பிற விவசாய உற்பத்திகள்
பிற
|
உற்பத்தி / கைத்தொழில்கள்
|
· ஆடை
· தளபாடங்களும் பலகை உற்பத்திகள்
· தோற்பொருள் / இறப்பர் உற்பத்திகள் மற்றும் பாதணி
· பிளாஸ்திக்கு உலோகம்
· உருக்கு மற்றும் இரசாயமும் தாதுப் பொருள்களும்
· அச்சிடல் மற்றும் வெளியீடு
· உணவும் குடிபானமும்
· மின்சாரமும் இலத்திரணியலும்
· மின் உற்பத்தி
· பிற
|
சேவைகள்
|
சுகாதாரமும் கல்விச் சேவைகளும்
நிதியும் வியாபாரமும்
சுற்றுலாவும் ஹோட்டல்களும்
பிற சேவைகள்
|
உட்கட்டமைப்பு அபிவிருத்தி
|
· நீர் மின்சாரம்
· சிறிய மின்சாரம்
· வீதி நிர்மாணம்
· கட்டிட நிர்மாணம்
· பிற
|
முன்னுரிமை அம்சங்கள்
பின்வரும் உப துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
I. நிலையான பயிர்கள்
II. பாற்பண்ணை
III. மீன்பிடி
IV. விவசாய அடிப்படைக் கைத்தொழில்
V. பிற விவசாயப் பயிர்கள்
VI. தொழிநுட்ப உள்ளீடுகள்
மேற்குறித்த உப துறைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக கடன் வசதிகளை அனுபவிக்கும் அதேவேளை மேல் மாகாணத்திற்கு வெளியே பின்வரும் கருத்திட்டங்களுக்கும் வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
- ஏற்றுமதி ஊக்குவிப்பு
- இறக்குமதி மாணியங்கள்
- உள்ளூர் மூலவளங்களை பயன்படுத்தி பெறுமதி சேர்ப்பு
- வேலைவாய்ப்பு உருவாக்கம்
தகைமை பெறும் கடன் வசதிகள்
மேற்குரித்த துறைகளில் பின்வரும் நோக்கங்களுக்காக கடன் வசதிகள் வழங்கப்படும்.
- உபகரணம், பொறித்தொகுதி மற்றும் இயந்திரங்கள் என்பதுடன் பாரிய வாகனங்களை விஷேட கருத்திட்டங்களுக்காக கொள்வனவு செய்தல்.
- விஷேட கருத்திட்டங்களுகக்கான தொழிற்சாலைக் கட்டிடம், ஆய்வுகூடங்கள், ஹோட்டல் கட்டிடங்கள் மற்றும் தொடர்புடைய நிர்மாணங்கள் என்பவற்றினை நிர்மாணித்தல்.
- இயந்திரங்கள் / உபகரணங்கள் நிறுவுதல்.
- உயர்தொழிநுட்பத்தினைப் பெற்றுக் கொள்ளல்.
- விஷேட கருத்திட்டங்களுக்காக உயர் தொழில்புரிநர்கள் / நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்.
- சிறு நிதியளிப்பின் கீழ் சுய வேலைவாய்ப்பு.
பொதுவான விடயங்கள்
•மேல் மாகாணத்திற்கு வெளியிலுள்ள கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
•கருத்திட்டம் உள்ளூர் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் குறித்த பிரதேசத்தின் மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும்.
•உத்தேச கருத்திட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்தல் வேண்டும்.
•கருத்திட்டச் செலவினத்தில் ஆகக்குறைந்தது 30% ஆனது வாடிக்கையாளரினால் செலுத்தப்படல் வேண்டும்.
•கருத்திட்டமொன்றுக்கு ஆகக்கூடிய கடன்தொகை ரூபா 30.0 மில்லியனாகும்.
•விண்ணப்பதாரி வேறு பிற வங்கிகளுக்கு பணம் செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
தேவையான ஆவணங்கள்
•கருத்திட்ட அறிக்கை
•பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
•ஆள்சார் உத்தரவாதங்களினால் பிணையளிக்கப்பட்டிருப்பின், உத்தரவாதம் வழங்குபவர்களின் அறிக்கை மற்றும் வருமான விபரம்.
•அசையா சொத்துக்களினால் உத்தரவாதம் வழங்கப்பட்டிருப்பின் உறுதியின் பிரதி, வரைபடம் மற்றும் வீதி நிரல் சான்றிதழ் அத்துடன் கையேற்பற்ற சான்றிதழ் அனைத்தும் வேண்டப்படும் பொழுது சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
•தேவைப்படும் போழுது ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகளிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெறப்படுதல் வேண்டும்.
கடன் வழங்குவதற்கு எடுக்கும் காலம்
கடன் தொடர்பான கருத்திட்டம், அதனையொத்தவை மற்றும் அதன் அளவு என்பவற்றின் அடிப்படையில் காலம் வேறுபடலாம்.
அமைப்பு பற்றிய தகவல்Lankaputhra Development Bank
No 80,
Nawala road,
Nugegoda
Mr. Sumeda Edirisuriya தொலைபேசி:011 2821030 / 011 2821035 தொலைநகல் இலக்கங்கள்:011 2821031 மின்னஞ்சல்:info@lankaputhra.lk இணையத்தளம்: www.lankaputhra.lk
|